June 10, 2026

கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது – தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு: ராமதாஸ் அறிக்கை!


தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? தமிழக தொழில் துறைக்கு இது பெரிய இழப்பு ஆகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய தொழில் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும். கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எஃகு தயாரிப்பு, இயந்திர உற்பத்தி, மின்சாதனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்கள் வளர்ச்சியடைந்திருக்கும்.

குறிப்பாக கடலோர மாவட்டங்களை மையமாகக் கொண்டு புதிய தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். மாநில அரசுக்கு வரி வருவாய் அதிகரித்திருக்கும். துறைமுக வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும்.
– தொ