November 14, 2026

பொறுப்பற்ற கருப்புச்சட்டை உபதேசம்!
வன்னியர்கள் கண்டனம்…!

திமுகவின் மூத்த தலைவர் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தான் பேத்தியின் திருமணத்தை அவர் விருப்பம் போல் நடத்துவதற்கு அனுமதி இல்லை? என்றால் அப்படிப்பட்ட இயக்கம் தமிழர்களுக்கான இயக்கம் என்று எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழனாய் வாழ்ந்துக் கொண்டு வரும், துரைமுருகன் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் தகுதியும் துணிவும் வந்தேரிகளுக்கு எப்படி வந்தது? என்ற கேள்வி எழுகிறது.

திராவிடர் கழகம் ஏன் தமிழர்கழகம் என்று பெயர் சூட்டப்படவில்லை? என்பது குறித்து எந்த தமிழனும் கேள்வி எழுப்பாத நிலையில் ஆந்திராவின் தெலுங்கு மொழியை அடையாளமாக கொண்டு, தன்னை கன்னடர் என்று அறிமுகப்படுத்தியதோடு தமிழ்மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று வசைப்பாடி இந்திய சுதந்திரத்தை எதிர்த்து கருப்பு கொடி ஏற்றவேண்டும் என்று கூறியதோடு தள்ளாத வயதிலும் இல்லறத் துணையை விரும்பி மணந்தவர்.

தந்தை பெரியார் என்று அழைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டை கேள்வி கேட்டு, தமிழனை முட்டாள்களாக மடைமாற்றம் செய்து நாயுடு வகுப்பை சேர்ந்தவர் என்பதை மறைத்து நாயக்கர் என்று தன்னை அழைக்கும்படி -கூறியதன் விளைவு தமிழ்நாட்டின் தனிப்பெரும் சாதியான வன்னியர்கள், ஆதரவை பெற்றுக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்போடு சுயமரியாதை பிரச்சாரம் என்ற பெயரில் பவனிவந்து கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்து தமிழ், தமிழர், தமிழ்மொழி அடையாளங்களை மறந்து, ‘திராவிடர் கழகம்‘, ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்‘ என்று முழக்கமிட்டு தமிழன் தன் அடையாளத்தையும், மொழியையும் முறையாக கற்றுக்கொள்ள வழிவிடாமல் இருமொழி என்று கூறி விரும்பும் மொழி படிக்காமல் தாய்மொழி தமிழும் கற்காமல் அடிமை மொழி கற்றுக்கொண்டு, தமிழர் அல்லாத ஒருவரை தமிழ்இனத் தலைவர் என்று ஏற்றுக்கொண்டு அரசியல் அதிகாரத்தை கையில் கொடுத்து அமரவைத்து அழகுபார்த்த தமிழன், வீட்டு திருமணம் புரோகிதர் வைத்து வைதிக முறைப்படி நடைபெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திராவிடர் கழகம் என்ற கருப்புச்சட்டை அணிந்த சிலர் துரைமுருகனை பார்த்து இரட்டை வேடம் ஏன் என்று கேள்வி கேட்பதும், இத்தகைய செயலை திமுக தலைவர் அனுமதிக்க கூடாது என்றும் அறிக்கைவிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

இதை விடுத்த ஆசிரியர் கருப்புச்சட்டை வீரமணி வன்னியர்கள் திமுகவை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறிக்கொண்டு, திமு&கழகத்தையும் மீண்டும் தி.க&வாக மாற்றிவிட்டு போனால் தமிழன் வாழ்வும், வளமும் நலமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் ஒரு தமிழன் கையில் இருந்துக் கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இதை செய்வதற்கு திமுக தலைமைக்கு துணிச்சல் உண்டா?

ஊடகவியலாளர் என்ற பெயரில் ஒரு ஓட்டேரி நரி ஊளையிடுகிறது-. ஜீவசகாப்தன் என்ற பெயரில் வன்னியர் வீட்டு திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்பது தெரியாமலே சாதியை இழிவுப்படுத்தும் விதமாக பேசுகிறான். கூலிக்கு வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் மூன்றாம் தர மனிதன்.

திமுக ஆட்சி தமிழ்நாட்டில் வருவதற்கும் மு.கருணாநிதி முதல்வர் ஆவதற்கும் வன்னியர்கள் எத்தகைய தியாகம் செய்தார்கள் என்பதும், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, பண்ருட்டி ராமச்சந்திரன் வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சிராமச்சந்திரன் மதுராந்தகம் ஆறுமுகம், கடலூர் முட்டம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.வி.எம்.அண்ணாமலை, ஏ.கோவிந்தசாமி இன்னும் பலர். மற்றும் தருமபுரி சின்னசாமி, வடிவேல் கவுண்டர் போன்ற எண்ணற்ற தியாகிகள் உழைப்பு காரணமாக இருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

எந்த பலனும் அனுபவிக்காமல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு திமுக கொள்கையை ஏற்றுக் கொண்டு பேரறிஞர் அண்ணா மீது உள்ள பற்றினால் கலைஙர் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டு திமுகவை 13 ஆண்டு வனவாச காலத்தில் கட்டி காப்பாற்றி 1989&ல் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களில் வன்னியர் வாழும் வட மாவட்டங்கள் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியது என்பது வரலாறு.

பொதுச்செயலாளர் பதவியில் துரைமுருகன் இருப்பதினால் திமுகவுக்கு வாக்கு வங்கி நிலைத்து நிற்கிறது பதவி பறிக்க நினைத்தால், திமுக திகவாக மாறிவிடும் அபாயம் ஏற்படும். இதை புரிந்து கொண்டால் நன்மை உண்டு, இல்லையென்றால் கட்டாயமாக திமுகவை விட்டு வன்னியர்கள் வெளியேறும் நிலை உருவாகும்.

ரஜினி விமர்சனம் மீது அதிரடி காட்டிய பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தி திருமண விஷயத்தில் வருத்தம் தேவையற்ற-து. இது வன்னியர்கள் கருத்தாகும்.

குரங்கு குல்லாவை தூக்கி எறிந்த கதை நினைவுக்கு வரும்!

கருப்பு சட்டை உபதேசம் தேவையில்லை! துரைமுருகன் மீது விமர்சனம் தேவையற்றது.

  • டெல்லிகுருஜி