தமிழ்நாட்டில் மொத்தம் 5,77,46,618 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள்-2,82,03,992; பெண் வாக்காளர்கள் 2,95,34,734 உள்ளனர். மூன்றாம் பாலினத்தனவர்கள் – 7892 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு பின் 4 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. சென்னை மாவட்டத்துக்கான பட்டியலின் படி மொத்தம் 29.14லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களைச் சரிபார்த்து, பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 11ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 179 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 2 கோடியே 78 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 90 லட்சம் பெண் வாக்காளர்களும், 7,656 மூன்றாம் பாலினத்தவறும் இடம் பெற்று இருந்தனர்.
இதற்கிடையே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும் புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 73 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பிறகு தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போது எஸ்எஸ்ஆர் எனப்படும் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் தொடங்கப்பட உள்ளன.
2027 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்தன. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி, சென்னை மாவட்டத்துக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின்படி சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 01.01.2027ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்கத் திருத்த முறைக்கு முன்பு மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4079 ஆக இருந்தது. ஆண் வாக்காளர் எண்ணிக்கை -1395716, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை- 1496921, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை-868 என மொத்தம் 2893505 வாக்காளர்கள் இருந்தனர்.
சிறப்பு சுருக்கத் திருத்த முறைக்கு பின்பு(12.11.2026) மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4071 ஆக குறைந்து விட்டது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை-1404968, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை-1509040, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 900 என மொத்தம் 2914908 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது சென்னையில் 21,403 வாக்காளர்கள் புதிதாக அதிகரித்துள்ளனர். இளம் வாக்காளர்கள் 46,200 பேர் உள்ளனர்.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் 01.01.2027ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய டிசம்பர் 11ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- தொ

More Stories
தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத்தேர்தல் அரசியல் கட்சிகள் ஆட்டம் ஆரம்பம்:
திமுக அதிமுக கட்சிகள் திட்டம் என்னவாகும்..?
தவெக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பரிசுகள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி காட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு: