November 21, 2026

யோகியின் தியாகம்.-..
முதல்வர் விஜய்யின் செயல்…

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எத்தனையோ முதலமைச்சர்கள் நல்ல திறமை வாய்ந்தவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அதே நேரம் ஒவ்வொரு முதலமைச்சரின் தாய் தந்தையரின் புகழை உயர்த்தி பிடிப்பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற அளவில் ஆடம்பர வாழ்க்கையிலும் சரி அரண்மனை போன்ற வீடுகளிலும் சரி வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர்க-ளுடைய செல்வாக்கையும், அவர்கள் செல்வ செழிப்பையும் அவர்கள் வசித்து வந்த மாளிகைகளையும் பார்க்கும் பொழுது உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் காவி உடை தரித்து சன்னியாசம் பெற்று வாழ்ந்த போதிலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களாகவும், சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வம் தியாகமனப்பான்மை கொண்டிருப்பதினால் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் வகித்து இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராக பதவியேற்று கடந்த 10 ஆண்டுகளாக பணி செய்து வந்தபோதும் தனது தாயார் வசித்து வந்த வீட்டை அவர் மறைவிற்குப் பிறகு பார்க்கும் பொழுது இப்படிப்பட்ட தியாகியின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதராக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் என்று நினைக்கும் பொழுது கூடுதலாக நாம் அறிந்து கொள்ளவேண்டிய விஷயம் முதல்வரின் தாயார் மற்றும் அவருடன் உடன்பிறந்தவர்கள் அனைவருமே தேசப்பற்று மிக்க தியாகிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் அறியமுடிகிறது.

ஒருபோதும் முதல்வரின் பெயரை சொல்லி எவ்வித சலுகையும் உதவியும் எதிர்பார்க்காமல் உதவி கேட்காமல் தங்கள் வேலையை தாங்களே செய்துக் கொண்டு சராசரி மனிதர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் சிறப்பாகும். இத்தகைய தியாக மனம் கொண்ட தாயாரான சாவிர்த்திரி தேவி (91) வயது. அவர்களுடைய மரணம் உத்திரப்பிரதேச மக்களை மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் பசிக்கும் மக்களுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் தன் தாயார் உடலை தானே சுமந்து கொண்டு தனது இறுதிகடனை செய்து முடித்தார். அதே போன்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் தனது தாயார் உடலை தானே சுமந்து சென்று தனது இறுதி கடமையை செய்து முடித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப்விஜய் அவர்கள் ஒருபடி மேலே சென்று தனது கட்சியின் தொண்டனும், சட்டமன்ற உறுப்பினருமான பாபுவின் உடலை தன் தோள்மீது சுமந்து கால் செருப்பு கூட அணியாமல் சுடுகாடு வரை நடந்து சென்று ஒரு தொண்டனுக்கு கடமையாற்றினார் என்பது வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும். இத்தகைய செயல் இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத ஒன்றாகும்.

யோகி ஆதித்தியநாத்தின் தாயார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
– ஆர்