November 1, 2026

தலைவிதியை மாற்றும் தெய்வீகத் திருத்தலம்

தமிழகத்தில் உள்ள திருத்தலங்களில் மிகவும் பழமையான திருத்தலம் திருப்பட்டூர் ஆகும். இங்கு வந்து வழிபட்டு சென்ற பலரின் அனுபவங்கள் பரவசத்திற்குரியதாகும். மேலும், தஞ்சை பெரிய கோயிலைவிட பழமையான திருத்தலமாக நம்பப் படுகிறது.

பிரம்மன் சிலையுடன் உள்ள கோயில்களில் இதுவும் சிறப்பான கோயிலாகும். நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் குருவின் அதிதேவதையாக உள்ளார் இங்குள்ள பிரம்மா.

புராணத்தின் படி, உலகத்தில் படைக்கும் ஆற்றலை சிவபெருமானிடம் பெற்றார் பிரம்மா. அவருக்கும் ஐந்து சிரசுகளை கொடுத்து சமமாக பாவித்தார் சிவபெருமான் பிரம்மாவிற்கு நானும் சிவபெருமானுக்கு சமமானவன் என்ற ஆணவம் தலைத்தோங்கியது. இதனை சிவபெருமான் அறிந்து, தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என, ஒரு தலையை கொய்தார்.

படைப்புத் தொழில் பறிபோய் நான்முகனாக சிவபெருமானிடம் சாப விமோச்சனம் வேண்டினார். பூலோகத்தில் திருப்பட்டூர் திருத்தலத்தில் பன்னிரெண்டு (துவாதசலிங்கம்) லிங்கங்களை வழிபட்டால் சாபவிமோசனம் உண்டு என வரம் வழங்கினார்.

அதன்படியே, திருப்பட்டூரில் பன்னிரெண்டு லிங்கங்களையும் மனம் வருந்தி வழிபட்டார். ஆதலால், சிவபெருமான் அருள்பெற்று மீண்டும் படைப்புத் தொழிலை பெற்றார். இதுபோலவே, என்னை வழிபட்ட உன்னை இங்கு வழிபடுகிறவர்களும் பன்னிரெண்டு லிங்கங்களையும் வழிபடுபவர்களின் அமங்களமான தலைவிதிகள் மாறி மங்களமான வாழ்வை பெறுவார்கள் என ஆசிர்வதித்தார் சிவபெருமான்.

இத்திருத்தலத்தின் சிறப்பம்சம்

*அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் “திருப்படையூர்’ எனப்பட்ட தலம் “திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்லப்படுகிறது.

*சிவன் திருத்தலமாக இருந்தாலும் பிரம்மாவிற்கு தனி சந்நிதி உண்டு. அங்கு எப்பொழுதும் மஞ்சள் காப்பு செய்யப்பட்டு மஞ்சள் நிறத்தில் காட்சி தருகிறார் பிரம்மா. இவருக்கு மஞ்சள் நிறத்தில்தான் வஸ்திரங்கள் தரிக்கப்படுகின்றன.

*பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பல இடங்களில் உள்ளது என சொல்லப்படுவது போல் இங்கும் ஜீவசமாதி ஆனார் என்று சொல்லப்படுகிறது.

*பிரம்மன் வழிபட்ட பன்னிரெண்டு லிங்கங்களும் தனி மண்டபத்தில் உள்ளது. இது உச்சி மரத்தால் பதினாறு பட்டையுடன் உள்ளது. பிரம்மன் வழிபட்ட ஷோடச லிங்கம் பதினாறு பட்டையுடன் உள்ளது.

*குரு தோஷம் கொண்டவர்கள் அதாவது, ஜாதகத்தில் வியாழனுடன் சனி, ராகு, கேது உள்ளவர்கள். இங்கு வந்து வழிபட்டு, இங்கு வருபவர்களுக்கு இனிப்பான பொருள்களை வழங்கினால் தோஷம் நிவர்த்தி யாகும் என்பது நம்பிக்கை.

*புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தைகள் நன்றாக படிப்பதற்கும் நல்ல சிந்தனை உண்டாவதற்கும் இங்கு வந்து வழிபடலாம்.

*வாழ்வில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த திருத்தலம் நன்மை செய்யும் என்பது மாற்ற முடியாத நம்பிக்கை.

*நாம் சிறுவயதில் குருவிற்கு நிகரான ஆசிரியர் மற்றும் பெரியோர்களுக்கு துன்பம் செய்வித்திருந்தால், இங்கு வந்து வழிபட்டு மன்னிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து பெரியோர்களுக்கு வஸ்திரம் வழங்கி ஆசீர்வாதம் வாங்கினால் தோஷம் நீங்கும்.

*பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாக இது சிறந்த திருத்தலமாக உள்ளது.

*பொன்னுக்குவீங்கி என்னும் நோயானது இங்கு வந்து வழிபட்டு சென்றால் குணமாகும் என்பது நம்பிக்கை.

*பலரின் தலையெழுத்தை மாற்றும் திருத்தலமாக இந்த பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

எப்படிச் செல்லலாம்?

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் சென்றால் திருப்பட்டூரை அடையலாம்/

  • தொ