காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். வறட்சியால் வாடிய சம்பா, தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்றும் தவெக அரசை கேட்டு கொண்டுள்ளார்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து ஒரு மாதத்திற்கு மேலாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும், வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததைக் காரணம் காட்டி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வினாடிக்கு 10,920 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, அக்டோபர் 25-ஆம் தேதி 1003 கன அடியாக குறைக்கப்பட்டது. இப்போது வரை அதே அளவில் தான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அது குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றும். இன்னொருபுறம் விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழையும் இதுவரை குறிப்பிடக்கத்தக்க அளவில் பெய்யாதது தான் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா/தாளடி பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதற்கு காரணம் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
- தொ

More Stories
யோகியின் தியாகம்.-..
முதல்வர் விஜய்யின் செயல்…
ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் திடீர் ரத்து
பொறுப்பற்ற கருப்புச்சட்டை உபதேசம்!
வன்னியர்கள் கண்டனம்…!