சென்னை: சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்.டி. (அவசர மருத்துவம்) பட்ட மேற்படிப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மற்ற 33 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அடுத்த கட்டமாக தொடங்கப்படும். 85 எம்.டி. அவசர மருத்துவ இடத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் 50 ஆயிரம் இடங்கள் மத்திய அரசும் 50 சதவீதம் மாநில அரசும் நிரப்பும், உலக வங்கயின் 6100 கோடி உதவியுடன் பட்ட படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இந்த படிப்பு தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்றார்.
More Stories
5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்
சீனாவில் கொரோனா எழுச்சி வேகமாக உள்ளது- உலக சுகாதார அமைப்பு கவலை
யாரெல்லாம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும்- மருத்துவ நிபுணர் விளக்கம்