April 25, 2024

டிஎஸ்பியாக மாறிய விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. விஜேஎஸ்46 விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். டிஎஸ்பி இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.