வேலூர்: கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தில் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, காலை உணவு தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட த்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அந்த திட்டங்களின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு சென்றார். வேலூரில் கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து 2 நாள் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்து வைத்தார். முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி