November 10, 2024

மொழிவாரி மாநிலம் உருவான பிறகும்…! திராவிடம் என்ற சொல்லை நீக்க தயக்கம் ஏன்? இளைஞர்கள் கேள்வி?

திராவிடம் என்ற சொல்லாடலை தமிழர்கள் எவ்வாறு வரவேற்று இதய சுத்தியோடு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை கூர்ந்து உற்றுநோக்கும் பொழுது தற்கால தமிழ் இளைஞர்களுக்கு சில பல புதிய சிந்தனைகளும் பழமையை -ஏற்க வேண்டுமா? என்ற கேள்விகளும் இயற்கையாகவே எழுகிறது. குறிப்பாக திராவிடக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சிகள் உருவெடுத்தப்பொழுது புதுக்கோட்டை, திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத், நிஜாம் போன்ற சமஸ்தானங்கள் தவிர்த்த, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் சில தென்ஒரிசா பகுதிகள் சேர்ந்து சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்டது. இதனால் தென்னிந்தியாவை குறிக்கின்ற வகையிலும் தென்னிந்தியா ஒரு பகுதியை அடையாளம் படுத்துகின்ற வகையிலும் திராவிடம், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் சமூக சேவை இயக்கமாக விளங்கி பிறகு அரசியல் இயக்கமாக உருவெடுத்தது தான் திராவிட முன்னேற்ற கழகம் என்பது இந்த இயக்கம் பிற்காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகின்ற அளவிற்கு வலுவடைந்து இன்றளவு-ம் தமிழ்நாட்டை திராவிட முன்னேற்ற கழகமும், அதன் வழி தோன்றல்களும் ஆட்சி அதிகாரத்தில் ஆளுமை செய்கிறார்கள்.

ஒருங்கிணைந்த மாநிலமாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசாவின் சில பகுதிகள் ஆகிய ஐந்து மாநிலங்கள் சென்னை ராஜஸ்தானி என்று அழைக்கப்பட்ட பொழுது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆக இருந்து வந்தது. அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியை அமைப்பதற்கு பு88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பு95சு ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற பொது தேர்தலில் பு5சு சீட்டும் 34.85 சதவிகித வாக்கும், குறிப்பாக 6908870பு வாக்கும் கிடைத்தது. ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. 36 சட்டமன்ற ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை அப்பொழுது ஏற்பட்டிருந்தது.

அந்த கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 6சு சட்டமன்ற உறுப்பினர்களுடனும் பு3.பு8 சதவிகிதம் சு6040337 வாக்குள் பெற்றிருந்தது. இந்த காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டை சேர்ந்த மண்ணின் மைந்தர்களான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரும், மாணிக்கவேல் நாயக்கரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டின் முன்னேற்றமும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் உழைப்பாளர் பொதுநல கட்சி என்றும் வடஆற்காடு மாவட்டத்தில் காமன்வில் கட்சி என்றும் தோற்றுவிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிவாகை சூடினார்கள். இதன் பிறகு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முதல்வராக பதவியேற்று காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மாணிக்கவேல் நாயக்கரின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தார்.

பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக பு967&க்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் புதிய கூட்டணியை உருவாக்கி தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சி.என்.அண்ணாதுரை அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். சுயமரியாதை கலப்பு திருமணம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி மறுப்பு, இரட்டை குவளை ஒழிப்பு சென்னை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, போன்ற பல சீர்திருத்தங்களை மக்கள் முன் நிறுத்தி தங்களை ஏழைகளின் பாதுகாவலர் என்றும் பணக்காரர்களை எதிரியாகவும் சித்தரித்து பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் தங்கள் வசீகர பேச்சாலும் வார்த்தை ஜாலங்களாலும் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக தங்களை உயர்த்திக் கொண்டு அடையாளப்படுத்தி இன்று வரை தமிழக அரசியலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

எந்த இயக்கத்தை (காங்கிரஸ்) வேரோடும், வேரோடு மண்ணோடும் சாய்க்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், போர்க்குரல் எழுப்பி அதில் வெற்றியும் கண்டு ஆட்சிக்கு வந்தார்களோ இன்றைக்கு அதே காங்கிரஸ் கட்சியுடன் தோழமையோடு நட்பு பாராட்டி தங்கள் பதவியை தக்கவைத்து கொள்வதற்காக தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களோ, அகில இந்தியா காங்கிரஸ் கட்சியினரோ திராவிட முன்னேற்ற கழகத்தை தங்கள் எதிரியாக பார்க்காமல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களையும் புதிய உத்திகளையும் அறிமுகப்படுத்திய திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு என்ற பெயர் வைத்தார்கள். ஆனால் பு956&க்குப் பிறகு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், ஒரிசா என்று தனித்தனி மாநிலங்களாக அந்தந்த மாநில மொழியை முன்னிலைப்படுத்தி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. ஆனால் திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எந்தவித மாற்றம் இல்லாமல் இன்றுவரை அந்தப் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டு அரசியலில் களம் ஆடுகிறார்கள்.

குறைந்தப்பட்சம் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டப் பிறகு, திராவிடம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் இன்று வரை எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை, ஒரு புதிய சிந்தனையை தோற்றுவித்து கேள்வியாய் இன்று எழுந்து நிற்கிறது. திராவிடம் என்ற சொல்லாடல் தெற்கு என்றால் தென்னிந்தியாவை தான் குறிக்கிறது. குறிப்பாக தெற்கு என்றால் அது தென்னிந்தியாவை தான் அடையாளப்படுத்துகிறது. தமிழ்நாட்டையோ தமிழ்நாட்டு மக்களையோ, குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. பு895&ஆம் ஆண்டு ஒரிசாவில் மதுசூதனன் தாஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாக காரணமாக அமைந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட அன்றைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் பு953 டிசம்பரில் மாநில மறு சீரமைப்பு ஆணையத்தை அமைத்தார். உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பசல்அலி ஆணையத்தின் தலைவராகவும் எச்சன்குங்று, கே.எம்.பனிக்கர் இருவரும் குழுவில் உறுப்பினர்களாக இருந்தார்கள். வல்லபாய்பட்டேல் மறைவிற்குப் பிறகு கோவிந்து வல்லவ்பந்த் என்பவர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் மொழிவாரி மாநிலம் கமிட்டி ஆணையத்தின் கண்காணிப்பாளராக இருந்தார். இந்த கமிட்டியின் அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பு956 ஆம் ஆண்டு உருவானது. முதன் முதலில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும் பொழுது ஒரிசா (ஒடிசா) மாநிலம் உருவானது. அதன்பிறகு மற்ற மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை பு4 மாநிலங்கள் மட்டுமே இருந்தது. தற்பொழுது சு8 மாநிலம் மற்றும் 7 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தகைய வளர்ச்சி நாம் அடைந்திருந்தாலும் பல சீர்திருத்தங்களை முன்னிறுத்தி இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இன்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழையும் தமிழ் மொழியையும் முன்னிறுத்தி அடையாளப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறார்களே தவிர தமிழ்நாட்டில் புதிதாக அரசியல் இயக்கங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் உரிமை கொண்டாடுகின்ற அளவில் தங்கள் தொடங்குகின்ற அரசியல் கட்சிகளுக்கு பெயர் சூட்டுவதில்லை இது ஏன் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முன்னேற்ற திராவிட கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஆதி திராவிட பேரவை, பெரியார் திராவிட கழகம், திராவிடர் பாசறை இப்படி பல கட்சிகள் திராவிடம் என்ற சொல்லை உள்ளடக்கிய இயக்கங்களாகவே தோற்றுவிக்கிறார்களே தவிர, தமிழ்நாடு, தமிழர்கள், தமிழ் மொழி இவைகளை முன்னிறுத்தியோ, உள்ளடக்கியோ இயக்கங்கள் பெயர் வைப்பதில்லையே ஏன்? என்ற கேள்வி வேகமாக எழுகிறது. இன்றைய இளைஞர்கள் இது குறித்த ஆராய்ச்சியிலும் சோஷியல் மீடியாக்களிலும் தங்கள் கருத்துக்களை துணிந்து பதிவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து திராவிட என்ற சொல்லாடலை தாங்கிப் பிடிக்கும் இயக்கங்கள் தங்கள் கருத்தியலை மறுசீராய்வு செய்வார்களா? பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுபோன்ற பெயர்களில் உள்ள இயக்கங்கள் மாநில சிந்தனையுடனும் தேசிய கட்சிகளுடன் இணைந்து சிந்தித்தாலும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் நிலம், தமிழ்நாடு என்று உரிமை கொண்டாடினாலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இயலவில்லை என்றாலும் திராவிட கட்சிகளின் நட்பிருந்தால் மட்டுமே சட்டமன்றம் நாடாளுமன்றம் தொகுதிகளில் கூட்டணி அமைத்து வெற்றிப்பெற முடியும் என்ற நிலையில் இருந்து வருகின்றனர்.

திராவிடம் என்ற சொல்லாடலை தாண்டி, தமிழகம் உள்ளடக்கிய தமிழர்களை முன்னிறுத்துகின்ற, தமிழ்மொழிக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்ற ஒரு புதிய ஆட்சி முறையோ அல்லது புதிய பெயர் கொண்ட சொல்லாடலோ எப்பொழுது உருவாகும் என்ற கேள்வி தற்கால இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது வரவேற்கத்தக்கது.

– டெல்லிகுருஜி