வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழக கடலோர பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டு மையத்தை நேற்று பார்வையிட்டார். பின்னர், வீடியோ கான்பரன்சிங் மூலம் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் கலெக்டர்களிடம் நிலமையை கேட்டறிந்தார். இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்ததையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கொட்டிவாக்கம், நீலாங்காரை, பாலவாக்கம், பனையூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கத்தில் நடந்து சென்று புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி