November 2, 2024

தமிழக சட்டசபை 17-ந்தேதி கூட வாய்ப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.