March 27, 2025

சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த குழு: உயர்கல்வித்துறை ஆணை

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உயர்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தமிழுக்கு பதில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வினாத்தாள் மாறியது பற்றி விசாரிக்க தொழிநுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.