March 28, 2025

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜா இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இன்று (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.