2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

More Stories
தமிழ்நாடு சட்டப்பேரவையில்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக விஜய் பதவியேற்பு:
விசித்திரமான தேர்தல்
வித்தியாசமான அணுகுமுறை
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அலட்சியம்…
சீட்டுக்கு அலையும் கூட்டணி கட்சிகள்
பரிதாப நிலை….!