November 2, 2024

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்றவேண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி பேட்டி…!

எடப்பாடி பழனிசாமி தலையையில் அதிமுக வளர்ச்சி அடைவதை விட அழிவை நோக்கி தான் பயணம் செய்யும். ஆட்சியில் இருந்தவரை அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற தேர்தல்களில் அதிமுக விற்கு தோல்வியே தந்துள்ளார்கள். இதற்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சிப் பதவியில் இருந்து விலகி தாயுள்ளத்தோடு அதிமுக தொண்டர்களை அரவணைத்து செல்லுகின்ற பக்குவம் உள்ள தலைவரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டுமே தவிர கட்சியின் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு கட்சி நடத்திக் கொண்டிருந்தால் ஆட்சியையும் பிடிக்க முடியாது கட்சி தொண்டர்களையும் காப்பாத்த முடியாது. இதனால் மீண்டும், மீண்டும் தோல்வியை தான் சந்திக்க வேண்டி வரும். நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தற்பொழுது இருக்கலாம் நாளை வேறு ஒருவர் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் அதே நிர்வாகிகள் அந்த தலைவருக்கு பின்னால் சென்றுவிடுவார்கள். அப்படித்தான் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறக ஜானகிஅம்மா தலைமையை விட ஜெயலலிதாவின் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு தலைவர்களும் அதையே பின்பற்றினார்கள். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியால் கட்சியை காப்பாற்ற முடியாது கட்சியின் தலைவர் பதவிகாலம் தொடர்ந்து நீடிக்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலை தான் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள ஒரு சோதனையான காலமாகும்.

இதிலிருந்து தன்னையும், கட்சியையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் எல்லோரும் ஒரு அணியில் நின்று தவறுகளை மறந்து கட்சியின் உழைக்கின்ற நிலைக்கு வரவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனநிலை தாயுள்ளம் கொண்டவராக எடப்பாடி பழனிசாமி இல்லை. மறைந்த காளிமுத்து போன்றவர்கள் ஜெயலலிதாவை செய்யாத விமர்சனம் இல்லை பேசாத பேச்சு இல்லை இருந்தாலும் அவரை கட்சியில் இணைத்துக் கொண்டு அவரை அமைச்சராகவும் சபாநாயகராகவும் பதவி வழங்கி தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். இதுபோன்று ஒ.பன்னீர்செல்வம் ஆனாலும் சரி, சசிகலாவும் ஆனாலும் சரி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தோல்வி மேல் தோல்வி சந்திக்கும் இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். முன்னதாக ஒ.பன்னீர்செல்வத்துடன் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாகவும் அவர் மறைவிற்கு பின்னால் ஆர்.எம்.வீரப்பன் எதிராக ஜெயலலிதாவை அதிமுகவிற்கு தலைவர் ஆக்கி அதன் மூலம் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கொண்டு வருவதற்கு அரும்பாடு பட்டவர் என்பது நாடறிந்த விஷயம்-. “நூறை ஆறாக்குவதும், ஆறை நூற்றாக்கும்” இவருக்கு கைவந்த கலை. அரசியலில் இவருக்கு சாணக்கியன் என்ற பெயரும் உண்டு.

– டெல்லிகுருஜி