September 18, 2024

உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி வழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஷ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். குறிப்பாக, திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆட்சியர்கள், மதுரை காவல் ஆணையர், கோவை எஸ்பிக்கு விருது வழங்கப்பட்டது.