December 6, 2024

இரண்டு தவணை தடுப்பூசி; பூஸ்டர் தடுப்பூசி

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரனா 91, தற்போது ஒமிக்ரான் சு0சுசு வரையும் மக்களை அச்சுறுத்தி கொண்டு வருகிறது. பல உருமாற்றங்களை மேற்கொண்டு மனித உயிர்களை பலிவாங்க உருமாறி வரும் இந்த கொரனா தொற்று முற்றிலும் குணம் ஆவதற்கான மருத்துவ வசதி முழுமையாக நிறைவடையாத நிலையில் தடுப்பூசி ஒன்று தான் இதற்கு கொரனாவை தடுப்பதற்கு சிறந்த வழி என்று கடந்த காலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் முதல் தவணை, இரண்டாம் தவணை என்று ஊசிப் போட்டுக்கொண்டவர்கள் மூன்றாம் தவணையாக பூஸ்டர் ஊசிப் போட்டுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கான தொடக்க நிகழ்ச்சியையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அவர் அவர்கள் வசதிக்கேற்ப மூன்றாவது தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்டால் கொரனா தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

– டெல்லிகுருஜி