November 3, 2024

அதிமுகவை கைப்பற்ற நினைத்த சசிகலாவின் முயற்சிகள் படுதோல்வி பாஜக கட்சியில் சேர முயற்சி செய்கிறார்..! அதுவும் தோல்வியா..?

அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று கணக்கு போட்டு தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை என்று கூறிவந்த சசிகலா தொடர்ந்து பாஜக கட்சியின் நிர்வாகிகளுடனும், தலைவர்களுடனும் டெல்லியில் தொடர்பு கொண்டு தன்னை எப்படியாவது அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தார். அப்படிப்பட்ட எந்த முயற்சியும் சசிகலாவிற்கு பலன் அளிக்கவில்லை. ஆந்திராவை சேர்ந்த திரைப்பட நடிகை விஜயசாந்தி மூலமாக தூது அனுப்பி பேரம் பேசி பார்த்தார். அதுவும் ஒத்துவரவில்லை. தற்பொழுது உள்ள நிலையில் திமுகவிற்கு எதிராக தான் இருப்பதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சசிகலா வேறு வழியில்லையென்றால் பாஜக கட்சியில் சேருவதற்கும் நான் தயார் என்கின்ற அளவில் தற்பொழுது முயற்சிகள் செய்து வருகிறார். அந்த முயற்சியும் இப்பொழுது தோல்வியில் முடிந்து விட்டதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாக தான் முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் அவர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார். ஆனால் அது அவர்கள் சொந்த கருத்தாக எடுத்து கொள்வார்களா? அல்லது பாஜக கட்சிக்கு எதிராக அதிமுக செயல்பட போவதாக புரிந்துக் கொள்வதா என்பதை போக போக தான் தெரிந்து கொள்ளமுடியும். இருந்தாலும் சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் இல்லை என்பது தெரிந்து விட்டது. அதே போல் பாஜக கட்சியில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளப்போவதில்லை என்பதும் தெளிவாகி உள்ளது.