July 26, 2024

தானே புயலும் கடந்தகால நினைவுகள்

[responsivevoice_button voice=”Tamil Male”]பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக ஆட்சி புரிந்த நாட்கள் இன்றும் தமிழகத்தின் பொற்காலமாக மதிக்கப்படுகிறது. அவருடைய திட்டங்கள் இன்னமும் அகில இந்திய அளவில் தமிழகத்தின் புகழ்பரப்பிக் கொண்டிருக்கிறது. சென்னை துறைமுக விரிவாக்கத் திட்டம் அவர் காலத்தில் தொடங்கியது. அவர்காலத்தில் துவங்கிய மிமிஜி இன்றும் உலகத்தின் தலைசிறந்த கல்வி கூடங்களில் ஒன்றாக தமிழகத்தின் புகழ்பரப்பிக் கொண்டிருக்கிறது. அவர் காலத்தில் கட்டப்பட்ட சாத்தனூர் அணை, வீடுர் நீர்தேக்கம், பரம்பிக்குளம் திட்டம் முதலியவை எண்ணிப்பார்க்க இயலாத பயன்களை தந்துக் கொண்டிருக்கிறது. கல்வித் துறையில் அவர் துவக்கி வைத்த ஊர்தோரும் பள்ளி, இலவச கல்வ, இலவச சீருடை போன்ற மறுமலர்ச்சி திட்டம் இன்று மேலும் புதிய திட்டங்களால் மேன்மையடைந்து வருகின்றது. நகரங்களில் குவிந்திருந்த தொழில் நிறுவனங்களை மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி தொழில் வளர்ச்சியை துவங்கி வைத்தார். இன்னொரு காமராஜர் ஆட்சி வராதா என்று தமிழக மக்கள் ஏங்கி நிற்கிறார்கள்.