திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சரா்பில் தை மகளே வருக என்ற தலைப்பில் உழவு, உணவு, உணர்வுத் திருவிழா நடைபெற்றது. விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:- விவசாயத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும். ரசாயன உரங்களை தவிர்த்தால் காற்று, நீர் மாசு அடைவதை தவிர்க்க முடியும். நான் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மாணவர்களுடன் சேர்ந்து வேளாண் மண் சரா்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். சந்திராயன் 2-வது விண்வெளி கலம் தனது சுற்றுவட்டப் பாதையில் சென்றபோதிலும் நிலவில் மோதியதால் மெல்ல இறங்க முடியவில்லை. அதே சமயம் சந்திராயன் 3-வது விண்கலம் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. அது நிலவின் துருவப்பகுதியில் இறங்கும் என்று எதிர்பரா்க்கிறோம். நிலவுக்கு மனிதனை அனுப்ப பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிலவுக்கு இந்தியர்கள் சென்று திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றரா்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…