October 29, 2026

தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் கொண்டாட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!

முதலமைச்சர் விஜய் அறிவித்தபடி, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதற்குத் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் எதையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படாததும் கண்டிக்கத்தக்கது.

மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் 1-ஆம் தேதியை, அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரியைப் போலத் தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனை ஏற்று, முந்தைய அதிமுக ஆட்சியில் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது.