July 24, 2026

நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிறகு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி நரசிம்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

குறிப்பாக நீட் மோசடியை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தற்போது ஒன்றிய அரசிற்கு மறு உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது வரையிலும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு மத்திய அரசு தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்படவில்லை என்று அதிர்ப்பித்தியை வெளிப்படுத்தியது உச்சநீதிமன்றம்.

ஒரு வார காலத்திற்குள் பதில் மனு மத்திய அரசாங்கம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீட் தேர்வை கணிணி மூலம் நடத்துவது, முழுமையான வெளிப்படை தன்மையுடன் நடத்துவதும் தேர்வுக்கு முன்பும், தேர்வுகளின் போதும், தேர்வுக்கு பின்பும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல கருத்துக்களை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி ஆண்டு தோறும் விமான படை மூலமாக கேள்வி தாள்களை கொண்டு செல்ல முடியாது என்ற கருத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் மறு விசாரணை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் விரிவான ஒரு பதிலை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
– தெ