சென்னை: அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: * அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. * தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். * தமிழக மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. * த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

More Stories
தமிழ்நாட்டில் 5 தொகுதி இடைத்தேர்தல் அரசியல் கட்சிகள் ஆட்டம் ஆரம்பம்:
திமுக அதிமுக கட்சிகள் திட்டம் என்னவாகும்..?
தவெக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பரிசுகள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி காட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு: