சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்”என பதிவிட்டுள்ளார். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More Stories
புதுச்சேரி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது – தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு: ராமதாஸ் அறிக்கை!