[responsivevoice_button voice=”Tamil Male”]சத்தீஷ்கர் மாநிலம் பாஸ்டர் வனப்பகுதி, மாவோயிஸ்டுகளின் கோட்டை. அந்த பகுதிக்குள் ̧ழையும் அரசு ஊழியரையோ, போலீஸ்காரரையோ, மாவோயிஸ்டுகள் உயிருடன் விட்டதில்லை. ஆனால், அவர்கள் பிடியில் சிக்கிய போலீஸ்காரரை, அவர் மனைவி, கண்ணீர் போராட்டம் நடத்தி மீட்டுள்ளார்.
பீஜாபூர் மாவட்டம் போபால்பட்டனம் போலீஸ் நிலையத்தில் ’எலக்ட்ரீசியன்’ ஆக வேலை பார்த்து வந்தவர் சந்தோஷ். சொந்த ஊரான ஜவர்குண்டாவுக்கு, கோயில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்றிருந்திருந்த போது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார்.
திருவிழாவுக்கு போன கணவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி சுனிதா, கோட்வாலி காவல்-நிலையத்தில் புகார் அளித்தார். புகார் கொடுத்து விட்டு திரும்பிய போதுதான், சந்தோஷ், மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. கடத்தி செல்லும் காவலர்களை கொல்வது, மாவோயிஸ்டுகள் வழக்கம் என்றாலும். எடுத்த எடுப்பிலேயே கொன்று விட மாட்டார்கள்.’ஜன அதாலத்’ என்று அழைக்கப்படும் பஞ்சாயத்து’’ நடத்தி மரணதண்டனை விதிப்பார்கள். ஜன அதாலத்’’ கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த சமயத்தில், சந்தோஷை தேடி அவர் மனைவி சுனிதா வனத்தில் அலைந்து திரியும் தகவல் மாவோயிஸ்டுகளை எட்டியது. சந்தோஷின் முழு விவரமும் மாவோயிஸ்டுகளால் திரட்டப்பட்டது.
சந்தோஷ் மீதான விசாரணை நடக்கும், ‘ஜன அதாலத்’ கூட்டத்துக்கு வருமாறு சுனிதாவுக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். இதனால் அவர், ‘ஜன அதாலத்’ கூட்டம் நடக்கும் காட்டுக்கு அலறி அடித்து சென்றார்.
கூட்டம் நடக்கும் இடத்தில் சந்தோஷ், கைகள் கட்டப்பட்டு விசாரணை கூண்டில் நிற்க, அவரை சுற்றி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த கோலத்தில் கணவனை பார்த்த சுனிதா, கதறினார் என் கணவரை ஒன்றும் செய்து விடாதீர்கள்’’ என்று மாவோயிஸ்டுகளின் காலில் விழுந்து கெஞ்சினார். உடன் சென்ற கிராமத்து மக்களும் சந்தோஷிடம் கருணை காட்டுமாறு மாவோயிஸ்டுகளிடம் வலியுறுத்தினர். உன் கணவன் இனிமேல் போலீஸ்காரராக வேலை பார்க்க கூடாது. அந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அதற்கு சம்மதித்தால் உயிரோடு விடுகிறோம்’’ என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். என் கணவர் போலீஸ் வேலையில் இருந்து ராஜினாமா செய்வார்’’ என்று சுனிதா, மாவேயிஸ்டுகளிடம் சத்தியம் செய்து கொடுத்த பின்னரே, சந்தோஷ் விடுவிக்கப்பட்டார். வீடு வந்து சேர்ந்துள்ள அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
More Stories
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்த இந்தியா