July 18, 2024

தமிழ் நாட்டில் பொியாா் பிரசாரமும் திராவிடா் கட்சியும்

[responsivevoice_button voice=”Tamil Male”]ஒரு காலத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ª ச ய் து வ ந் த பி ர ச £ ர ம் தமிழர்கள் மத்தியில் விரைவாக ப ர வி ய து . இ த ன £ ல் சுய-மரியாதை என்ற சொல்லாடல் இளைஞர்கள் மத்தியில் திராவிடர் தலைவர்களால் புகுத்தப்பட்டது. திராவிடம் சொல்லாடலால், தமிழ், தமிழ்தேசியம் என்ற சொல்லாடல் த மி ழ ர் க ளி ட ம் இ ரு ந் து மறைக்கப்பட்டு மறுக்கப்படக் காரணமாகிப்போனது. காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்ப-டுத்த பெரியார் மேற்கொண்ட முயற்சி என்பது தேசிய சிந்தனையை தமிழர்கள் மத்தியில் அப்புறப்படுத்தி இதற்காக திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மேலும் திராவிடம் என்ற சொல் தமிழர் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பெரிய அளவில் உதவிடவில்லை என்றே கூறலாம். மாறாக திராவிடம் என்ற சொல் சுய-மரியாதையை திரும்ப திரும்ப கூறியது. ஆனால் தமிழர்களின் சுயசிந்தனையை அது முற்றிலும் மழுங்கடித்து தமிழர் வாழ்வியலில் இருண்ட காலத்தை தோற்றுவித்து தமிழ் இனத்தையே சுடு, சொரணை அற்றவர்களாக தோற்று-வித்துள்ளது என்றேக் கூறவேண்டும். தி ர £ வி ட ர் க ழ க ம் , திமுக-வானது. பெரியாரிடம் இருந்து விலகிய சி.என்.அண்ணாதுரை, தன்னுடைய சகாக்களுடன் திராவிடமுன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார். இதற்காக அண்ணாதுரை அவர்கள் கூறிய காரணம் மணியம்மையை பெரியார் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக்கொண்டார் என்பதும் ஒரு காரணம். ஆனால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, தமிழர்கள் வாழ்வில்

ஒளிஏற்றுவதாக கூறியவர்கள் பிற்காலத்தில் ஊழல் மலிந்த தமிழகம் என்ற அவப்பெயரை ஏற்படுத்தினார்கள் என்பதே நிஜம். அண்ணா, பெரியார், இருவர் நாமத்தைத் தவிர தமிழன் தன், தாய் தந்தை என்ற வார்த்தையையே அதிகம் உச்சரித்ததில்லை! எத்தகைய வளர்சசி…? வெள்ளை ஏகாதிபத்தியம் நம் நாட்டை ஆண்டபோது தமிழ்நாட்டின் வளம் சுரண்டப்பட்டது என்று நாம் குரல் கொடுத்து விடுதலை பெற்றோம். ஆனால் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் அதில் அறுபது ஆண்டுகள் தமிழ்நாட்டில் திராவிடர் ஆட்சி, ஆனால் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இவைகள் தலைவி-ரித்தாடுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை அங்கீகரிக்கப்படுவதில்லை. இன்னும் பெரியார், சுயமரியாதை கொள்கை குறித்து பேசுவதையே பெருமையாக கருதுகிறோம். ஒரு வாரஇதழ் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்து ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் பெரியார் ஆதரவு நிலையில் வாதாடுகின்றனர். அப்படி என்ன நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இன்று ஒட்டுமொத்த தமிழகம் ரஜினி பற்றி பேசுகிறது. இதற்கு திராவிட கட்சிகளும், திராவிட கழகமும் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியில் ரஜினிகாந்த் அமர்ந்து விட்டால், பாமரன் அவரிடம் நெருங்க முடியாது. ஆனால் இன்று விமர்சனம் பேசுவதும், எதிர்த்து பேசுவதுமாக உள்ள திராவிட கழகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரஜினி வீட்டு வாசல் வரைச் சென்று பொன்னாடை போர்த்த காத்திருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். இன்று பிராமணர் எதிர்ப்பு நாளை பிராமணர்கள் ஆதரவு நிலைக்கு யார் காரணம் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. நீதிமன்றங்களும், முதல்வர்களும் நியாயமான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகின்ற ஜனநாயக நாட்டில், பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயகர் குறித்த விமர்சனம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பெரியார் கொள்கை பெரியார் குறித்த விமர்சனம் இரண்டையும் ஏற்றுக்கொண்டு தனிமனித தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ரஜினிகாந்த் குறித்து போலீசில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு ஆகியவை தேவையற்றவையாகும். மேடையில் பேசிய கருத்தை, இன்னொரு மேடை போட்டு விமர்சனம் செய்வதே சாலச் சிறந்தது. அதனை விடுத்து ரஜினிகாந்த் வீட்டை முற்றுகை இடுவதாக கூறுவது ஏற்புடையது அல்ல என்பது தமிழர்களின் அதிகம் பேர் எதிர்பார்ப்பு, என்பதை உணரவேண்டும். இதற்கு மாறாக தி.க., திமுக., அதிமுக ஆகிய கட்சிகள் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற அரசியல் இயக்கங்கள் எதிர்மறையாற்றினால் ர-ஜினிகாந்த் வளர்ச்சி தமிழர்கள் மத்தியில் தவிர்க்க இயலாது. தவறுகளை சுட்டிக்காட்டி இடித்துரைத்து எடுத்துக் கூறலாம். முற்றுகை, நீதிமன்ற வழக்கு, காவல்நிலையத்தில் புகார் பதிவு, வழக்கு தொடுத்தல், திராவிடம் தமிழர் என்று மோதலாக உருவெடுத்து பெரியார் கொள்கை நீர்த்துபோனதும், பழமையானதும் இளைஞர்கள் மத்தியில் பொதுமக்கள் மத்தியில் எடுபடாமல் போகிவிடும் ஆபத்து ஏற்படும். இதன் விளைவு ஆன்மீக அரசியல் தலையெடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும், தேசியம், தமிழ்தேசியம், தமிழர் என்ற உணர்வு மேலோங்கும். திராவிடர் ஆட்சி போய் தமிழர் ஆட்சி நடைபெறும். அப்பொழுது முதல்வர் யார் என்பது பிரச்னையாகாது. கடந்த கால முதல்வர்க-ளை நினைத்து ஆறுதல் அடைவான் தமிழன்! – சாமி