April 26, 2024

ராமதாசுக்கு எதிராக பாட்டாளிகள் முடிவு…!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாமக கட்சியினருக்கு டாக்டர் ராமதாஸ் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள புசு8சு0 இடங்களிலும் பாமக கட்சி சார்பில் கண்டிப்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் (கடந்த முறை நடைபெற்று முடிந்த உள்ளாட்சி, ஊராட்சி தேர்தல்களில் பாமக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை என்ற நிலையில் இந்த அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டுள்ளார்) கடந்த முறை நடைபெற்ற தவறு இந்தமுறை நடைபெற்று விடக் கூடாது. வேட்புமனு முடிந்த பிறகு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவின் மூத்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். நானும் பிரச்சாரத்தில் பங்கேற்பேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அதிமுக கூட்டணியை முடித்துக் கொண்டப் பிறகு திமுகவுடனும் கூட்டணி இல்லை என்ற நிலையில் தனித்துப் போட்டியிடுவதால் எந்தவித பயனும் இல்லை என்று பாமக கட்சியினர் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது.

மேலும் ஆளுங்கட்சி எதிராக உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற முடியாமல் போய்விட்டால் உள்ளூர் பிரச்சனைகள் நம்மால் தீர்க்க முடியாத அபாயம் உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பாமக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அதிகளவில் விரும்பாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக, திமுக ஆங்காங்கே சமரசம் செய்துக் கொண்டு தனது சாதிக்காரர்கள் (வன்னியர்கள்) யார் வெற்றி வாய்ப்பை பெறமுடியும் என்று அவர்களை ஆதரித்து கட்சி பாகுபாடில்லாமல் வாக்களித்து வெற்றிப்பெற செய்வதற்கு யோசித்து வருவதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக, அதிமுக கட்சிகள் இப்பொழுதே பாட்டாளிகளை அணுகி ஆதரவு திரட்டுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். குறிப்பாக வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஆளுங்கட்சி எதிராகவும், எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் ஈடுப்பட போவதாக பாட்டாளிகள் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.

  • – டெல்லிகுருஜி