April 26, 2024

ரஜினியின் அறிக்கையும் கொக்கின் நினைப்பும்! தொண்டர்களுக்கு ஏமாற்றமே!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து சமூக வலைதளங்களில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு அது வைரலாக தொலைக்காட்சிகள், ஊடகங்கள் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவிக்கொண்டு வரும் அறிக்கை என்னுடையது அல்ல என்று மறுப்பு வெளியிட்டுள்ளார். கூடவே வைரலாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மருத்துவர்கள் மட்டும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி இயலாது என்பதற்கும் ரஜினி விளக்கம் தந்துள்ளார். “என் உடன் நிலை மற்றும் என் மருத்துவர்கள் கொடுத்த அறிக்கைகள் அனைத்தும் உண்மை ” இதைப் பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி தெரிவிப்பேன் கூறியுள்ளார்.

வழக்கம் போல் இந்த அறிவிப்பின் மூலம் ரஜினிகாந்த் கூறியிருப்பது ஒரு தெளிவான புரிதலை வெளியிடுவதற்கு பதிலாக குழப்பமான பதிலை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அறிக் இல்லை என்று கூறும் ரஜினி அவர்கள் அந்த அறிக்கைகள் கூறப்பட்டுள்ள வாசகங்கள் உண்மை என்கிறார். அப்படியானால் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் என்ற நிலையில் இருந்து விலகி செல்கிறார் என்று தொண்டர்கள் நினைக்கத் தோன்றும். கடந்த காலத்தில் தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் அவர்களை அழைத்து பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டி “இப்போ இல்லை என்றால் எப்போ” என்ற கேள்வியும் எழுப்பியிருந்தார்கள். அந்த போஸ்டர் ஒட்டப்பட்டதை ரஜினி எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால் ஊடகங்களில் வெளியாகும் செய்திக்கும் மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பல குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒருவேளை இது கொரனா காலம் என்பதால் ரஜினிகாந்த் அரசியல் வருவதற்கு யோசித்து கொண்டிருக்கிறாரா அல்லது கொரனா முடிந்து தோற்று முழுவதும் நீங்கியப் பிறகு அரசியலில் ஈடுபடலாம் என்று யோசித்து வருகிறாரா? என்பது போக போகத் தான் தெரியும்.

நாம் (அக்னிமலர்கள்) ஏற்கனவே கூறிய உள்ளப்படி ரஜினிகாந்த் அவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கி தமிழக அரசியல் ஆட்சியை புடிக்க வேண்டும் என்ற மன உறுதியற்றவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த அறிக்கையின் மூலம் நமக்கு தெரியவரும் தகவல்கள் கட்டாயம் ரஜினி அவர்கள் புதிய அரசியல் கட்சி இந்த ஆண்டு தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது உறுதியாகிறது. ரஜினியை பொறுத்தவரை இது நல்ல முடிவாக கூட இருக்கலாம். ஆனால் ரஜினி அரசியலை நம்பி அவருக்கு துணையாக அரசியல் களத்தில் இறங்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களுக்கும் ரஜினி மக்கள் மன்ற தொண்டர்களுக்கும் ரஜினியின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.

“கருவாடு சாப்பிட விரும்பிய கொக்கு; கடற்கரை ஓரத்தில் காத்திருந்ததாம் கடல் வற்றி மீன்கள் கருவாடு ஆகும்” என்று கணக்குப் போட்டு காத்திருந்த கொக்கின் நிலைப் போல ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடும் இருப்பதாக கருதப்படுகிறது.

– சாமி