காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோவா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
இதில் காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தேர்தல் பார்வையாளர் ப.சிதம்பரம், பொதுச் செயலாளர் கே.வேணுகோபால், கிரீஷ் சோடேங்கர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திகம்பர் காமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கோவாவில் தீவிர பிரசாரத்தை தொடங்கி பா.ஜனதாவின் தோல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
எங்களது தலைவர் ராகுல் காந்தி கோவா மாநில காங்கிரஸ் கட்சி கோவா மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க கட்சி தலைவர்கள் தீவிரமான பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
எங்களது அனுதாபிகள் ஆதரவாளர்களை நாங்கள் தேர்தல் வெற்றியை நோக்கி அழைத்து செல்வோம். நாங்கள் பா.ஜனதாவை கண்டிப்பாக தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை பிடித்தது. பா.ஜனதா 13 இடங்களை பிடித்தது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை