April 26, 2024

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.