வன்னியர் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களை நியமிக்கும் பொறுப்பு வன்னியர் பொதுசொத்து நலவாரியமே நியமனம் செய்யவேண்டும். அரசு நியமனம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயகுமார் அவர்களின் ஐந்து வருட முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் இந்த உத்தரவு கிடைத்திருக்கிறது. இனிவரும் காலங்களில் பீ.டி.லீ.செங்கல்வராய அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் அறங்காவலர்களை நியமிக்கும் பொறுப்பு வன்னியர் பொதுசொத்து நலவாரியத்துக்கே உள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக கூறுகிறது.
வன்னியர் சங்கங்களின் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்பொழுது பீ.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள் கடந்த காலத்தில் தங்கள் பொதுநலம் கருதாமல் வன்னியர் நலவாரியத்தின் செயல்களை முடக்கி சுயநலத்திற்காக அரசின் கையில் நியமன அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் நியமனத்தை பெற்றுக் கொண்டார்கள். நியாயமாக பார்த்தால் இந்த நியமனம் செல்லுபடியாகாது என்ற படியும் இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. இருந்தாலும் அரசு நியமித்து உள்ளதால் தற்போது உள்ள நியமனதாரர்கள் தங்கள் காலம் முடியும் வரை இந்த அறங்காவலர்களாக தொடரலாம். அல்லது மனசாட்சிப்படி தங்களது பதவிகளை ராஜினாமா செய்யலாம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின்படியும் நியாயத்தின்படியும் வன்னியர் பொதுசொத்து நலவாரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பாகும். தற்பொழுது வன்னியர் பொதுசொத்து நலவாரிய தலைவராக ஜெயராமன் ஐ.ஏ.எஸ் அவர்கள் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் வாரியத் தலைவருக்கே நியமன அதிகாரம் உள்ளது என்பதை தீர்ப்பு தெளிவாக கூறுகிறது. குறுக்குவழி பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாகும்.
உரிமையை நிலைநாட்டுவதற்கும் வழக்கின் தன்மையை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்து இந்த தீர்ப்பை பெற்று தந்த வழக்கறிஞர் உதயகுமார் பாராட்டுக்குரியவர்.
– விஜயராணி
More Stories
இராமதாஸ் – சுசிலா 50 ஆவது திருமண நாள் – மாலை மாற்றிக் கொண்ட போது எடுத்தப்படம்
பீகாரில் திருத்தத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரம் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கலைஞர் நினைவு நாளில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை