April 26, 2024

பிரதமரின் பஞ்சாப் பயணம் பாதுகாப்பு குறைபாடா? திட்டமிடலில் ஏற்பட்ட குழப்பமா?

கடந்த ஓராண்டு காலமாக விவசாய சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று வீதியின் நின்று போராடிய விவசாய சங்கங்களின் போராட்டத்தை காதுகொடுத்து கேட்டும் தீர்வு காணாத மத்திய அரசு தீடிரென்று ஒருநாள் ஓராண்டை கடந்தப் பிறகு விவசாயகளின் கோரிக்கை வைத்த மூன்று சட்டங்களையும் பாராளுமன்றத்தின் மூலமாக திரும்பப் பெற்றது. இதற்கிடையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினார்கள். குறிப்பாக போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்று வெற்றிப்பெறும் வரை மனதில் உறுதியோடு வீதியில் நின்றவர்களை குறிப்பிடத்தகவர்களும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, விவசாயிகள் ஆவார்கள். மத்திய அரசின் எதிரான போராட்டத்தில் விவசாயிகளே வெற்றிப் பெற்றார்கள் என்றே கூறலாம். இந்த மாதம் சு0சுசு ஆம் ஆண்டு புத்தாண்டுக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதாக திட்டமிட்டிருந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற பிரதமர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு செல்லும் போது மோசமான வானிலை கடும் பனி நிலவியதால் சாலை வழி பயணத்தை மேற்கொண்டார். அவரது பயணம் இடையில் தடுத்து நிறுத்தப்பட்டு திட்டமிட்டப்படி பஞ்சாப் மாநிலத்திற்கு செல்ல முடியாமல் பிரதமர் திரும்பி டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கு காரணம் விவசாயிகளின் முற்றுகை என்பதும் மாநில அரசின் அலட்சியப்போக்கும் அரசியல் பின்னணியு-ம் இருப்பதாக கருதப்பட்டாலும் பிரதமர் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும். இதற்கு யார் பொறுப்பு என்பதை விட இதற்கு யார் பொறுப்பானவர்கள் கண்டிக்கப்படி வேண்டியவர்கள் என்பதே பலரது கருத்தாக உள்ளது. “நல்லவேளை நான் உயிரோடு திரும்பினேன்” உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் உருக்கமான வெளியிட்ட செய்தி பஞ்சாப் மாநில மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இதயங்களில் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறவேண்டும். அனுதாப அலையை உருவாக்குவதற்காக பிரதமர் இவ்வாறு செயல்படுகிறார் என்று சிலர் விமர்சனம் செய்தாலும் பாகிஸ்தானுக்கும் இந்திய எல்லைக்கும் மிக குறுகிய தூரம் உள்ள இடத்தில் பிரதமர் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியத்துடன் பிரதமர் திரும்பி வந்தது பிரதமரின் பாதுகாப்பில் உள்ள குறைப்பாடா? அல்லது பாதுகாப்பை ஏற்பாடு செய்தவர்களின் குளறுப்படியா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் அரசிடமும் உரிய விளக்கத்தையும் பதிலையும் தரவேண்டும் என்று கோரிக்கையும் உள்துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது. விவசாயிகளின் போராட்டம் திடீரென்று ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை உளவுத் துறையும் மாநில அரசு காவல்துறையும் நிச்சயமாக கண்டறிந்து இருக்க வேண்டும். அதை தவிர்த்து பிரதமரை முற்றுகையிடுகின்ற அளவிற்கு அனுமதித்தது பிரதமர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திட்டமிட்டப்படி தனது பயணத்தை விட்டு திரும்பி சென்றது போன்ற நிகழ்வுகள் அரசியல் ரீதியாக பார்க்கப்போனால் சிலருக்கு அது ஏற்புடையதாக இருக்கலாம். நிர்வாக ரீதியாக அதை அணுகினால் இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்தை நிர்வாகிக்க கூடிய நிகழ்வாகத்தான் பார்க்க முடியும்.

மத்திய அரசு, மாநில அரசு இரு அரசுகளுமே இதுபோன்ற விஷயங்களில் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கவேண்டும். நடைபெற கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தி, பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் முழு அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இன்று நடந்த விஷயம் நாளை வேறொரு மாநிலத்திலோ அல்லது வேறொரு நிகழ்ச்சியிலோ முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் போது நடைபெற கூடாது. பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக்கொள்வது அதை விட்டுக்கொடுத்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய விஷயமாகும். கடந்த காலங்களில் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்கள் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக இலங்கை சென்றபோது காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை இலங்கை அரசு வழங்கியபோது காவல்துறையினல் இருந்த ஒருவன் தன் கையிலிருந்த துப்பாக்கி கட்டையால் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை தாக்க முயற்சித்தான் நல்லவேளை அந்த தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாத்து கொண்டார் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள்.

தமிழர்களின் நலனில் அக்கறை இருந்ததினால் அதை தீர்த்து வைக்கவேண்டும் என்று விரும்பியதினால் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜீவ்காந்தி அவர்களுக்கு இலங்கை காவல்துறையை சேர்ந்த ஒரு சிங்களவனினால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பு99புஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பாதுகாப்பு சரியான முறையில் கடைப்பிடிக்காததினால் உரிய பாதுகாப்பு இல்லாமல் மிகப் பெரிய அளவில் குறைப்பாடு இருந்ததினால் அதே இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்ட ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் தாணு என்பவராகளால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது கடந்தகால வரலாறு. இதற்கெல்லாம் முழுக்க பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என்று அடித்துக் கூறலாம்.

ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு பஞ்சாப் மாநிலத்தில் பயணம் செய்ய இருந்த பிரதமர் மோடி அவர்களின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது மிகப் பெரிய வரலாற்று பிழையாகும். இதுபோன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பிரதமரை முற்றுகையிடலாம் என்ற அளவிற்கு விவசாயிகள் என்ற போர்வையில் நடந்த நிகழ்வு கடுமையான கண்டனத்திற்குரியது இதுமட்டுமல்லாமல் இந்த செயலுக்கு விவசாயிகள் மீது பழிப்போட்டு தப்பித்துக் கொள்வதும் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் மாநில அரசு நழுவிக்கொள்வதும் ஏற்க தக்கதல்ல. பிரதமர் மோடி அல்ல வேறு ஒரு எந்த கட்சியும் சேர்ந்தவரும் பிரதமராக ஆனாலும் நாம் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் தேசத்தை காப்பதற்குத் தான் முதலிடம் தரவேண்டும். தேச தலைவர்களை பாதுகாப்பதில் தான் நம் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறை இந்த விஷயத்தில் தீர ஆராய்ந்து நடந்த நிகழ்வை அதற்கு யார் பொறுப்பு என்ன காரணம் என்பதை நாட்டுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கண்ணியமான கடமையாகும். இது ஒரு சாதாரணமான தும்பியல் விஷயமாக பார்க்கக் கூடாது.

– டெல்லிகுருஜி