April 4, 2025

தேர்தலில் வெற்றிப் பெறுவது எப்படி தொகுதிகளை ஏலம் விடும் அரசியல் கட்சிகள்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைப்பதற்காக அப்போதைய தலைவராக இருந்த எம்.பழனியாண்டி அவரது அலுவலகத்தில் அமர்ந்து காங்கிரஸ் கட்சி அரசியல் சாணக்கியர் என்று போற்றப்பட்ட எஸ்.ஜி.விநாயமூர்த்தி அவர்களோடு ஆலோசனை நடத்தியப்போது (அக்னிமலர் ஆசிரியர் பன்னீர்செல்வம்) 234 தொகுதிகளையும் டெண்டர் முறையில் ஏலம் விட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்ற புதிய கருத்தை முன்னிலைப்படுத்தி விவாதித்தப் பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலுவலகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காமராஜர் பவனில் காங்கிரஸ் தலைவர் அறையில் இருந்தவர்களெல்லாம் ஆச்சரியம் கலந்த ஒரு ஏலனமான சிரிப்பை உதித்தார்கள். ஆனால் எஸ்.சி.விநாயமூர்த்தி அவர்கள் மட்டும் இது அருமையான திட்டம் என்று பாராட்டினார்கள்.

அன்றைக்கு இத்தகைய திட்டத்திற்கு இத்திட்டம் குறித்து பிரபலமாகவும் பேசப்படவில்லை. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பிரசாந்த்கிஷோர் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த அரசியல் ஆலோசனை குழு அமைத்து ஒரு நிறுவனத்தையே உருவாக்கி குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக உருவாக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுத்து அதன்படி நிருபித்தும் காட்டியுள்ளார். பிரதமராக மோடி அவர்கள் பதவி ஏற்பதற்கு மிகப் பெரிய அளவில் உதவியதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். இதற்காக பிரசாந்த் கிஷோர் பெற்ற தொகை பலகோடி ரூபாய் ஆகும். பணம் பெற்றுக் கொண்டு மக்களின் எண்ண ஓட்டங்களை கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் தொகுதி முழுவதும் சுற்றிவந்து மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தேவையான 10 விஷயங்களை கண்டறிந்து அதில் 8 விஷயங்களை பின்னுக்கு தள்ளி குப்பை கூடையில் வீசிவிட்டு இரண்டு திட்டங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி வாக்காளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக ஆசை வார்த்தையை பரவ விட்டு அதன் பலன் பணம் அளித்தவர்களுக்கு கிடைக்கின்ற வகையிலே தனது திறமையை வெளிப்படுத்தி பிரதமர் மோடி அவர்களை இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் அமர வைத்து சுமார் 60 ஆண்டு காலமாக இந்தியாவின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களோடு மக்களாக களத்தில் நின்று பணியாற்றிய 125 ஆண்டுகள் கொண்ட காங்கிரஸ் பேரியக்கத்தையே கரை ஒதுங்க செய்துவிட்டார் பிரசாந்த் கிஷோர் அவர்கள் என்பது அரசியல்வாதிகள் மத்தியில் மிக வேகமாக பிரபலமாகியது.

பீகார் மாநிலத்தில் தனது பரிசோதனையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் அடுத்து குஜராத், அடுத்து ஆந்திர மாநிலம், அடுத்து மேற்குவங்கம், அடுத்து தமிழ்நாடு என்ற அளவில் தனது தேர்தல் வியாபார உத்தியை விரிவாக்கம் செய்து ஒப்பந்தம் செய்துக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு தலைவர்களுக்கு ஆட்சியை கைப்பற்றும் ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டி விட்டு வருகிறார். இவரது வலையில் சிக்கிய திமுக ஸ்டாலினும், மேற்குவங்க மாநில திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி இருவரும் தற்பொழுது பிரசாந்த் கிஷோர் அவர்களை முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் கட்சியின் தொண்டர்களை நம்பினால் மட்டும் போதாது ஏஜெண்டுகளை நம்பினால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மூதலிடு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டால் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று அரசியல் கட்சிகள் கணக்கு போடுகின்றனர். பிரசாந்த் கிஷோர் செயல்களும் நடவடிக்கைகளும் சிலநேரம் கானால் நீராகிவிடுகிறது. அப்படி இருக்கும் பொழுது திமுக தமிழகத்தில் அவரை நம்பி ஆட்சியை கைப்பற்றுவதற்கு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முயற்சி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தோற்றுவித்துள்ளது. ஒருவேளை பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளும், முயற்சிகளும் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலினை திமுகவின் தலைமை பொறுப்பிற்கு வெக வேகமாக கொண்டுவருவதற்கு பயன்படலாம். ஆனால் 2021 தேர்தலுக்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு எந்த வகையில் பயன்பெறும் என்பதை போக போகத் தான் தெரியும். பிரசாந்த் கிஷோரின் தலையீடு பல கட்சிகளின் உள்கட்சி பிரச்சனையில் பல சீர்திருத்தங்களை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் திமுகவில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெறுமளவில் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக அண்ணா , கலைஞர், ஸ்டாலின் காலத்து அரசியல்வாதிகளுக்கு அதிகளவில் வாய்ப்புகள் மறுக்கப்படலாம். உதயநிதி ஸ்டாலின் ஆதரவு பெற்றவர்களுக்கு மட்டும் அதிகளவில் வாய்ப்பு கிடைக்கப் பெறலாம். இதனால் திமுக வெற்றியும் பல இடங்களில் கேள்வி குறியாகலாம். ஆகவே அரசியல் கட்சியை வழிநடத்தும் தலைவர்கள் தங்கள் கட்சி சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மீது மட்டும் அதிகளவில் நம்பிக்கை வைப்பது வெற்றியை தேடித்தரும். தொகுதிகளை ஏலம் விட்டு கூடுதல் பணத்தை விரயம் செய்து வெற்றியை தட்டிப்பறிக்க முயற்சி செய்தால் தொண்டர்கள் சோர்வுற்று நம்பிக்கை இழந்து தோல்வியை தழுவுகின்ற ஒரு சூழல் உருவாகலாம். அல்லது எதிர்கால அரசியலில் ஏலம் முறை மூலம் மட்டுமே வெற்றி தோல்வியை உருவாக்கலாம் என்ற எண்ணம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தோன்றலாம். பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் கணிப்பு ஏஜெண்டுக்களுக்கு மவுசு கூடலாம். புதுபுது கருத்து கணிப்பு ஏஜெண்டுகளும் உருவாகலாம்.

டெல்லி குருஜி