April 26, 2024

சசிகலா வருகை! எடப்பாடி ஓட்டம்!

“வந்ததால் வந்தாரா! வராதிருந்தால் வந்திருக்க மாட்டாரா!” என்பதை போல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அதிமுக அவை தலைவரும் இரட்டை இலை தொடர்பான வழக்கில் முக்கிய நபருமான மசூதனன் அவர்களை பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்த பொழுது சொல்லி வைத்தார் போல் சசிகலாவும் மருத்துவமனைக்கு வந்து மதுசூதனை பார்ப்பதற்கு அதிமுக கொடியுடன் காரில் வந்து இறங்கினார். இந்த தகவல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது அதை கேட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து உடனடியாக வெளியேறினார். இந்த தகவல் அரசியல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடியுடன் இருப்பவர் சசிகலாவுக்கு தகவல் தந்தாரா? அல்லது சசிகலாவுடன் இருப்பவர் எடப்பாடி வரும் நேரத்தை கேட்டு தெரிந்துக் கொண்டாரா? என்ற கேள்வி சந்தேகமும் அதிமுகவினர் இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் உறுப்பினரே அல்லாத ஒருவர் கட்சிக்கு அவப்பெயரை பெற்று தந்த ஒரு நபர் அரசியலில் இருந்து விலகிப்போகிறேன் என்று அறிவித்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவின் தொண்டர்களின் ஒற்றுமையை பிளவுப்படுத்தும் வண்ணமாக தொலைபேசி மூலம் குறிப்பிட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடல் நடத்துவதும் நான் விரைவில் வருவேன் அதிமுகவை கைப்பற்றுவேன் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று தொலைபேசியில் உரையாடுவதும் அந்த உரையாடலை தொலைக்காட்சி மூலம் ஒளிப்பரப்பு செய்வதும் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு அறவே பிடிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் பத்திரிகையாளர் மத்தியில் பேட்டி அளிப்பதும் சசிகலா மருத்துவமனைக்கு வந்ததை குறித்து தவறில்லை என்று வரவேற்பதும் காரில் அதிமுக கொடியை போட்டுக் கொண்டு வருவதை கடுமையாக எதிர்போம் என்று கூறிக்கொண்டு கண்டனம் தெரிவிப்பதாக கூறுகிறார் ஜெயக்குமார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக அதிமுக தரப்பில் இருந்தும் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தும் எந்தவிதமான எதிர்வினை கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் அவப்பெயரை பெற்று தருவதாக அமைந்துள்ளது என்று அதிமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அசைவுகளும் அவருடைய திட்டங்களும் முன்கூட்டியே சசிகலாவிற்கு தெரிந்துவிடுகிறது. இந்த தகவல் எப்படி தெரிகிறது என்பது எடப்பாடி தரப்பிற்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் எடப்பாடிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள் சாமி மற்றும் அதிமுக தலைமை நிலைய மேலாளர் மகாலிங்கம் அவர்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது பாலச்சந்தர் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுப்படுத்துகிறது. வராதிருந்தால் வந்திருப்பீர்! வந்ததால் வரவில்லை!! அது என்ன அர்த்தம் என்பது புரிய வேண்டியவர்களுக்கு மட்டுமே புரியும். அரசியலில் இருந்து விலகியிருப்பேன் என்று சசிகலா கூறியதும் தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் நான் அதிமுக மீண்டும் கைப்பற்றுவேன் என்று சசிகலா கூறுவதும் இதன் பின்னணி என்ன என்பதை ஆராயாமல் சசிகலா சுற்றுப்பயண ஏற்பாட்டை திட்டமிடுவதும் சசிகலாவை வரவேற்க மாவட்டந்தோறும் தினகரன் கட்சி தொண்டர்கள் (அமமுக) செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதும் அப்படியென்றால் சசிகலாவிற்கு அதிமுகவினர் மத்தியில் வரவேற்பு அளிப்பதற்கு ஆட்கள் இல்லையோ என்ற தோற்றமும் எழுகிறது. கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றால் பொதுச்செயலாளர் பதவிக்கு அதிகார பூர்வமாக நேரடியாக சசிகலாவே போட்டியாளர்களாக நிறுத்தப்படுவாரா? அல்லது அவர் ஆதரவு பெற்ற ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்கு நிறுத்தப்படுவாரா? எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தை தாண்டி சசிகலாவும் போட்டியிடுவரா? என்ற குழப்பமான என்ற சூழலும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உலா வருகிறது.

& டெல்லிகுருஜி