மருத்துவர் அய்யாவுக்கு மனம் திறந்த மடல்!
அய்யா! போகப் போக தெரியும். பாடல் எதற்காக அடிக்கடி கூறுகிறீர்கள் அய்யா! நீங்கள் நேற்றுவரை கூறியதெல்லாம் பொய்யா! மெய்யா! அய்யா? பொய் என்ற சொல் அடிக்கடி கூறுகிறீர்களே எதற்காக?
கடந்த கால சொந்த வாழ்க்கையை மறைத்து ஊமை ஜனங்களை ஏமாற்றியுள்ளேன் என்பதை வன்னியர்களே புரிந்து கொள்ளுங்கள் என்பதை நினைவுபடுத்திடவா?
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் உங்கள் இதயத்தில் ஈரம் இல்லையா?
பாறைக்குள் தேரை இருக்கும் அதற்கும் சுனையில் நீர் இருக்கும். உங்கள் உள்ளத்தில் கருணையே இல்லையா?
அன்புமணியை தன் மகனாக பார்க்க வேண்டாம். ஒரு தலைவனாக பாருங்கள். அவர் உழைப்பும், உண்மை முகமும், உங்கள் கண்களுக்-குத் தெரியும். பொதுமக்கள் ஏற்றுக் கொண்ட ஒருவராக அன்புமணி இருப்பதினால், உங்கள் மனம் ஏற்க மறுக்கிறதா? அல்லது வெறுக்கிறதா?
சமுதாயத்தால் ஏற்றுக் கொண்டு ஒருவர் அரசியல் அரங்கம் ஒத்துக்கொண்டு பேசும் பேராண்மை மிக்கவர் என்று போற்றப்படும் ஒருவரை பொய் பொய் என்றால் என்ன அர்த்தம். உண்மைக்கு புறம்பாக மக்கள் ஏற்காத செய்தியாக உங்கள் பேச்சு இருக்கிறது.
அன்புக்கு மகுடம் சூட்டவேண்டாம். அன்பிடம் வம்பும் கட்டவேண்டாம். அடக்கி வாசித்தால் அமரரூள் உய்க்கும். எதற்கெடுத்தாலும் என்னை வந்து பார் என்றால் எதற்கு வந்து பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
நீதியின் பக்கம் அன்புமணி, நியாயத்தின் பக்கம் நிற்கிறார். மக்களின் பக்கம் அன்புமணி பாட்டாளி ஏற்றுக் கொண்டார்கள்! புதிய அத்தியாயம் படைப்பார். புகழின் உச்சியை எட்டிப் பிடிப்பார்.
இன்று இகழ்வோர்
நாளை புகழ்வார்!
நீங்களும்
உள்ளம் மகிழும்
முதல் நபராக வாழ்த்துவீர்கள் அய்யா!
உங்கள் புகழையும் பெருமையையும் உலகம் அறிய செய்பவர் அன்பு தான்.
உங்கள் நலனில் அக்கறை உள்ள பாட்டாளி சொந்தங்கள்…!
More Stories
மோதலுக்கு தீர்வு என்ன?
தெரிந்தால் சொல்லுங்கள்…
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது!
பண்ருட்டி தி.வேல்முருகன்
நாளை குரூப்-4 தேர்வு: தனியார் பஸ்சில் ‘சீல்’ வைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்கள்