April 25, 2024

அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

நாமக்கல் : நாமக்கலில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதில் நாமக்கல் மட்டுமின்றி தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்வார்கள். இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி, அன்று காலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அதற்காக வடை தயாரிக்கும் பணி 4-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு, தரிசன வசதி உட்பட அனைத்துக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.