April 26, 2024

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா அதிரடி திட்டம்!

பெங்களூர் சிறையிலிருந்து தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு அபராத தொகை 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் தலைநகர் சென்னை வரை தமது ஆதாரவாளர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு சென்னையில் குடியேற போகும் சசிகலா ஓரிரு நாட்களில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ஒவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு சென்று பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்து தனது கட்சிப் பணியை மேற்கொள்வதற்காக சிறையில் இருந்துக் கொண்டே தனது திட்டங்களை தயாரித்து வருகிறார் சசிகலா.

பெங்களூர் நீதிமன்றங்கள் தசரா விடுமுறையாக இருப்பதால் அந்த விடுமுறை காலம் முடிந்தவுடன் தான் செலுத்த வேண்டிய அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்துகிறார். தனது முழு தண்டனை காலம் நிறைவேறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ன்னடத்தை அடிப்படையில் விடுமுறை சலுகைகள் கிடைக்கப்பெற்று மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சசிகலா விடுதலை பெறும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக மாநில அரசின் தகவல் தெரிவிக்கிறது.

ஆகவே சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனால் பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று தமது அரசியல் பணியை மேற்கொள்வதற்கு அதிரடி திட்டம் தயாரித்து வைத்துள்ளார். இதற்கு ஏற்றார்போல் தற்போதய அமைச்சர்களில் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல மாவட்ட செயலாளர்கள் சசிகலாவின் ஆதரவாளர்களாக (சிலிப்பர் செல்) இருந்து வருகிறார்கள். இப்படிப் பார்த்தால் 60% மேற்பட்டவர்கள் சசிகலாவின் ஆதரவாளர்களாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தான் விடுதலை ஆக வேண்டும் என்று விரும்பும் சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை அடைவதற்கு தீவிரம் காட்டிவருகிறார்.

– சாமி