April 26, 2024

அதிகாரிகள் ஆட்சி…! அமைச்சர்கள் மௌனம்! முதல்வர் கவனிப்பாரா? உடன்பிறப்புகள் புலம்பல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடனும் மாவட்ட ஆட்சி தலைவர்களுடனும் தொடர்ந்து நேரடியாகவும் காணொலி காட்சி வழியாகவும் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் தனி தனி குழுக்கள் நியமித்து குழுக்கள் வழங்கும் அறிக்கையின் படி சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதே நேரம் அமைச்சர்கள் பரிந்துரைகளும் ஒவ்வொரு அமைச்சர்களுக்குள் உள்ள இடைவெளியும் கட்சியினர் வழங்கும் சிபாரிசு கடிதங்களையும் அந்த சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களின் பகிந்துரைகளையும், கடிதப் போக்குவரத்தும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் மிகப் பெரிய அளவில் இடைவெளியும் காலதாமதம் ஏற்படுவதாக திமுக கழக நிர்வாகிகளும் ஆட்சிக்கு ஆதரவு நிலையை எடுத்து அதிகாரிகளும் எந்த காரியமும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. ஒரு சில காரியங்கள் நடைபெற்றாலும் அது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடைபெறுகிறது என்றும் புலம்புகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முறையில் தீர்வு காண்பதற்காக மூத்த அமைச்சர்கள் முதல் புதிய இளம் அமைச்சர்கள் வரை ஒருவர் கூட தைரியமாக துணிச்சலாக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச்செல்ல தயங்குகிறார்கள். முதல்வரின் அணுவலக செயலாளர்களின் ஒன்று இரண்டு மூன்று என்று வகைப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மூவரும் துறை சார்ந்த செயலாளர்களுக்கு எத்தகைய முறையில் உத்தரவுகளை பிறப்பிக்கிறார்களோ அதன்படி மட்டுமே திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவை தவிர ஒவ்வொரு அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் நியமனத்திலும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் வழிகாட்டுதல்படி நியமிக்கப்படுவதாகவு-ம் அப்படி நியமிக்கப்படுபவர்கள் அமைச்சர்களின் நடவடிக்கைகளில் மினிட் சு மினிட் கண்காணித்து முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தருகிறார்களே தவிர அமைச்சர்களுக்கு ஏற்றப்படி கட்சிக்காரர்களின் விருப்பத்தை அமைச்சரிடம் எடுத்துச் செல்வதில் மெத்தனமாகவும் பாராமுகமாகவும் இருந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல அமைச்சர்கள் அலுவலகத்தில் இருந்து உலா வருகிறது. இதை முதல்வர் நேரடியாக கண்காணித்து உரிய முறையில் ஆலோசனை வழங்கி உடன்பிறப்புகளையும் அரசு அதிகாரிகளையும் தனது உத்தரவு மூலம் உற்சாகப்படுத்த வேண்டும் இல்லையென்றால் விருப்ப அரசியல் வெறுப்பு அரசியலாக மாறும் என்ற அபாயம் ஏற்படும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

– டெல்லிகுருஜி