January 30, 2023

மிரட்டும் கேப்டன் டிரைலர்

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன்’. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் ‘கேப்டன்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.