பிரதோஷம் அன்று ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எந்த கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
சிவன் வழிபாடு பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.
ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் – நல் எண்ணம், நல் அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் பிரதோஷம் – நல்ல குழந்தை பாக்கியம் தரும்
வியாழன் பிரதோஷம் – திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப் பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்.
தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
More Stories
அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் எழுப்பிய பக்தர்கள்
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்