இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து பா.ஜனதா தலைவர் ஆனவர் அண்ணாமலை. அவ்வப்போது அதிரடியாக பேசி அரசியல் களத்தை அதிர வைப்பார். சமீபத்தில் எழுந்த வட மாநிலத்தவர்கள் பிரச்சினையில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. அதற்கும் அதிரடியாக ‘முடிந்தால் கைது செய்து பாருங்கள்’ என்று சவால்விட்டார். அடுத்த மாதம் பாத யாத்திரையை தொடங்க இருக்கும் அண்ணாமலை அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார். ஆனால் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ‘அண்ணாமலையிடம் துணிவு இருக்கும் அளவுக்கு பணிவு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
தமிழ்நாடு சட்டப்பேரவையில்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக விஜய் பதவியேற்பு:
விசித்திரமான தேர்தல்
வித்தியாசமான அணுகுமுறை
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அலட்சியம்…
சீட்டுக்கு அலையும் கூட்டணி கட்சிகள்
பரிதாப நிலை….!