November 10, 2024

திருந்தாத தனுஷ் கள்ளக்காதல் மோகத்தால் ஐஸ்வர்யாவை பிரியவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்! விவகாரத்துக்கான காரணம் என்ன?

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா (வயது 40) நடிகர் தனுஷ் திருமணம் திடீரென்று அறிவிப்பு வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் எனக்கும் ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெறும் என்று அறிவித்தார். அந்த திருமணம் இருகுடும்பத்தார் சம்மதத்துடன் நடக்கும் என்றும் இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் அனுமதி வழங்கிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இல்லற வாழ்வில் 18 ஆண்டுகள் ஈடுபட்டிருந்த நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமணம் 2022 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்துள்ளது. தற்பொழுது இருவரும் விவகாரத்துக்கு சம்பதம் தெரிவித்து பிரிந்து விடுவதாக அறிவித்துள்ளார்கள். கோலிவுட்டின் முன்னணி நடிகரனா நடிகர் தனுஷ் (வயது 38) இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இரண்டாவது மகன் என்றாலும் தனுஷ்வின் பிறப்பில் ஒருவிதமான சந்தேகம் எழுப்பப்பட்டு இவர் தலித் வகுப்பை சேர்ந்த ஒரு தம்பதியரின் மகனாக அறிவிக்கப்பட்டார். அது குறித்த வழக்கு நீதிமன்றம் வரை சென்று வழக்கு தள்ளுப்படியான நிலையில் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருவதுடன் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்ற பன்முகத்தன்மையுடன் திரையுலகில் உலா வந்து கொண்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கலா திரைப்படத்தையும் தனுஷ் தயாரித்திருந்தார். இந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக தனுஷ் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்து விஷயத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் உறுதி செய்துள்ளார். இருவரும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதவிட்டு நாங்கள் இருவரும் விவகாரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவலை வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இதே போல் ரஜினியின் இளைய மகள் சவு-ந்தர்யாவும் முதல் கணவரை விவகாரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணமும் செய்துக்கொண்டார் அவருக்கும் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து காரணம் என்ன? என்பது குறித்து ஊடகங்கள் மூலமாகவும், சோஷியல் மீடியாக்கள் மூலமாகவும் பல்வேறு விதமான கருத்துக்களும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருந்ருக்க தருணத்தில் நமக்கு கிடைத்த தகவலின் படி நடிகர் தனுஷ் சிற்றின்பத்தில் ஊறி திளைத்து தான் சம்பாதிக்கும் வருவாயை தன்னுடன் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாயை வாரி வழங்கி வருவதாகவும் நடிகைகளோடு எப்பொழுதும் மயக்க நிலையில் நடிகையின் மடியில் படுத்து உருண்டு நடிப்பு தொழிலில் ஆர்வம் இன்றி கடன் வாங்கி நடிகைகளுக்கு பணம் கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழ விரும்பியதினால் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவிடம் இருந்து மெல்ல மெல்ல விலகி சென்று முழுநேரம் நடிகைகளுடன் தனது காதல் லீலைகளையும், கையில் உள்ள பணத்தையும் கரைத்துக் கொண்டிருந்த தகவல் ரஜினியின் காதுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் கவனத்திற்கும் அன்றாடம் வந்துக் கொண்டிருந்த வேளையில் தனுஷை பலமுறை எச்சரித்த ஐஸ்வர்யா திருந்துவதாகவோ அல்லது நடிகைகளின் வலையில் இருந்து விடுப்பட்டு மீண்டும் வருபவராகவோ இல்லாததினால் இறுதியாக எச்சரிக்கை செய்த ஐஸ்வர்யா வேறு வழியின்றி எச்சரிக்கை விடுத்த ஐஸ்வர்யா இறுதியாக எடுத்த முடிவு தான் விவகாரத்து என்பது. வேறு வழியில்லாமல் இதற்கு சம்மதம் தெரிவித்த தனுஷ் நட்புடன் இணைந்தோம், நட்புடன் பிரிவோம் என்று செய்தியை வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெயரை பயன்படுத்தி தனுஷ் தந்தை இயக்குநர் கஸ்தூரிராஜா பல லட்சம் கடன் வாங்கி ரஜினியின் பெயரை சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளார் கடந்த காலத்தில் என்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற செய்தி ஊடகங்கள் மூலமும், ரசிகர்கள் மூலமும் பரபரப்பாக பேசப்பட்ட நேரத்தில் இந்த செய்தி ரஜனிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்துவது போல் அமைந்துள்ளது.

மேலும் தற்பொழுது ஐஸ்வர்யா தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் தனுஷ் அடிக்கடி ஐஸ்வர்யாவிடம் பணம் கேட்டு தொல்லைக்கொடுத்து வந்ததாகவும் தொல்லை பொறுக்கமுடியாமல் தனது இரண்டு மகன்களின் நன்மை கருதி தனுஷ் விட்டு விலகுவதே தனது சிறந்த முடிவாகும் என்ற நிலையில் விவகாரத்துக்கு சம்மதித்துள்ளார். சினிமா துறையில் அதிக ஆர்வமும், நாட்டமும் கொண்டுள்ள ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் எதிர்காலம் குறித்து இனிமே எத்தகைய முடிவை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இனிமே நடிகர் தனுஷ்வுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் உறவும் இல்லை என்பதை உதறி தள்ளி முடிவுக்கு வந்துவிட்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன் என்பதால் நடிகர் தனுஷ்க்கு மரியாதையா, ஐஸ்வர்யாவின் கணவர் என்பதால் தனுஷ்க்கு மரியாதையா என்பது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற குரல் தான் நினைவிற்கு வருகிறது.

– விஜயராணி (சினிமா விமர்சனம்)