September 18, 2024

தமிழ்தேசம் – வன்னிய தேசம்
மகரம்

செடியில் மலர் உருவாவதைப் போல, வன்னிய சமுதாயத்தில் தலைவர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். மலாஜீன் மணம் அனைவரையும் சென்றடைந்ததா, மலர் மாலையாகி, மாயோனின் கழுத்தை அலங்காரித்ததா, என்ற விவரம் ஆராயப்பட வேண்டியவை. இந்தக் கட்டுரையில் வன்னிய சமுதாயத்தில் தனது தனித்தன்மையால் மங்காப் புகழ் பெற்று, மறைந்த சில தலைவர்களின் வாழ்க்கையின் சாதனைகளைப் பார்ப்போம்.

பெரியாருக்குப் பெரியார் அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயக்கர் அவர்கள். கி.பி. 1800-ஆம் ஆண்டில் பிறந்து, 98 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். சென்னையில் வளர்ந்தவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். ஆசிரியர் பணியையும், சுண்ணாம்பு வியாபாரத்தையும் செய்து பெரும் பொருள் ஈட்டியவர். தான் பிறந்த சமூகமான வன்னியர் மீட்சிக்காகப் போராடியவர். வன்னியர்களுக்குச் சொந்தமான மன்னவேடு நிலங்களை வந்தேறிகள் அபகரித்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்.

அந்நியர்களிடம் சிக்கி இருந்த அநேகம் மன்னவேடு கிராமங்களை, தனது சுய சம்பாத்தியப் பணத்தை செலவு செய்தும், சட்டப் போராட்டங்கள் மூலமாகவும், சமாதானம் மூலமாகவும், மீட்டு வன்னியர்கள் வசம் ஒப்புவித்து, அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பினை செய்து தந்தவர். தனி ஒரு நபராக நின்று, ஆதிக்க சாதியினர் ஆதிக்க சக்தியினர், மற்றும் அரசு அதிகார வர்க்கம் ஆகிய மூன்று சக்திகளையும் எதிர்த்து துணிச்சலோடு போராடியவர். பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் சாதிய ஆதிக்கம் எவ்வகையில் பொருளாதார ஆதிக்க வடிவம் பெறுகிறது என்பதை இவருடைய நூலான “பாயாக்காரிகள் மிராசுதாரர்களோடு செய்த போராட்டம்” என்பதில் இருந்து தெரிய வருகிறது. பெரியாருக்கு முன்னோடியாக, ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்திற்கு அயோத்திதாச பண்டிதரும், வன்னியர் சமூகத்திற்கு வேங்கடாசல நாயக்கரும் போராடியிருக்கிறார்கள். ஆனால், அயோத்திதாச பண்டிதர்க்கு கிடைத்த அங்கீகாரம் இவருக்குக் கிடைக்காததற்குக் காரணம், இவர் சார்ந்த வன்னிய இனம் அரசியல் அதிகாரம் பெறாததே.

வன்னிய அரசியல் தலைவர்களில் இன்றைக்கும் துருவ நட்சத்திரமாக ஒளி வீசிக் கொண்டிருப்பவர் உழைப்பாளர் கட்சியை உருவாக்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இராமசாமிப் படையாச்சியார் ஆவார். இந்தியாவில் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் போதுமான இடங்களை வன்னியர்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் அன்றைய தலைவர்கள், சுயநல நோக்கோடு மறுத்தபோது, துணிந்து தனிக்கட்சி கண்டவர். மாநிலக் கட்சிகள் மனம் வைத்தால், மத்தியில் ஆளும் கட்சியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை சுதந்திர இந்தியாவுக்கு உணர்த்திய சரித்திர புருஷர். அவரும் வேலூரில் மாணிக்க வேலு நாயக்கரும், திருத்தணியில் ஏ.கே. விநாயகம் பிள்ளையும் எழுப்பிய வன்னிய சங்கநாதம் காங்கிரஸ் பேரியக்கத்தை கலகலக்க வைத்தது. விளைவு 1952-இல் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும், விடுதலை வாங்கித் தந்த இயக்கம் என காங்கிரசை மக்கள் ஆரத்தி எடுத்து வெற்றிக் கனியை அளித்த போது. தமிழ்நாட்டில் பெரும்பான்மை கிடைக்கப் பெறவில்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி அவர்கள் ஓடோடி வந்து, தமிழகத்தில் வன்னியர்களோடு இணைந்து, கூட்டணி மந்திரி சபையை அமைத்தது இன்றைக்கும் மறக்க முடியாத வன்னியர்களின் வெற்றி வரலாறு. குலக் கல்வித் திட்டத்தால், தனது முதல்வர் பதவியை இராஜாஜி அவர்கள் இழந்து, காமராஜர் அவர்கள் முதலமைச்சர் ஆனபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர். அவரது வன்னியர் இனத் தலைமையும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தைரியமும், சிறுபான்மையினர் தலைமை ஏற்றால் பெரும்பான்மையினரை வளர விட மாட்டார்கள் என்ற கள யதார்த்தமும் இவரது அரசியல் வாழ்க்கை சோபிக்க விடாமல் தடுத்து விட்டன.

இவருக்குத் துணை நின்றவர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 100 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பெரியவர் மாணிக்க வேல் நாயக்கர் ஆவார். அப்பொழுதே சட்டம் பயின்றவர். குற்றப் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்ட வன்னியர்களை, தனது நிர்வாகத் திறமையால், அதிலிருந்து மீட்டுக் கொணர்ந்தவர். வருவாய்த் துறை அமைச்சராகவும், தமிழக சட்டமன்ற சபாநாயகராகவும், இருந்து அனைவரது மதிப்பையும் பெற்றவர். அண்மையில், வட ஆற்காடு வன்னியர் சங்கம் அவருக்கான சிலையை நிறுவி அவர் புகழுக்குப் பெருமை சேர்த்தது. தனது சாதிய அடையாளத்தை துறந்த காரணத்தால், தனது அடையாளத்தை இழந்து அரசியலில் சூரியனாய் ஜொலிக்க வேண்டியவர் இரவில் மின்னும் நட்சத்திரமாய் மாறிவிட்டவர்.

எம்.பி. சுப்பிரமணியம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக வென்றவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1980 முதல் 1983 வரை இருந்தவர். கம்ப்யூட்டரைப் போல கூர்த்த மதியினர் என அனைவராலும் பாராட்டப் பெற்றவர். சுயேச்சை வேட்பாளராக 1952-இல் வென்று, பிறகு 1957-இல் தி.முக.வில் சேர்ந்து, 1960-இல் ஈ.வி.கெ. சம்பத் அவர்களுடன்
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவராக இருந்து, மீண்டும் காங்கிரசில் சேர்ந்து, 1998-இல் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அரசியல் சூதாட்டத்தில் தாயம் கிடைக்காத தலைவர்.

தளபதி கே. விநாயகம் பிள்ளை தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்ட தியாகி. வடக்கெல்லை போராட்டக் குழு தலைவராக சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் இவரைப் பற்றிக் கூறியது இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கது. “வடக்கெல்லை மீட்சிக்கான பயணத்தை மேற்கொண்டபோது, தெலுங்கர்கள் கடுமையாக எதிர்த்தனர். திருத்தணியில் எந்த சத்திரத்திலும் கூட்டம் நடத்த விடாமல் தடுத்தபோது, வன்னியர் சத்திரத்தைக் காட்டி, இதிலே கூட்டத்தை நடத்துங்கள். திருத்தணி மீட்புக்கு வன்னியர்கள் துணை நிற்கிறோம்.
தெலுங்கர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மிகுந்த துணிச்சலோடு கூறினார்.

அந்த வன்னிய சத்திரத்தில் அந்த இளைஞனின் கனல் பறக்கும் பேச்சு மக்களை உணர்ச்சிப் பிழம்பாக்கியது. அந்த முதல் சந்திப்பிலேயே விநாயகத்தின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. வடக்கெல்லைப் போராட்டத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகள் என்னோடு தோளோடு தோள் நின்று, போராடினார். இதனால், நான் அவரைத் தளபதி என்று அழைத்தேன்.” திரு விநாயகம் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆகவும், அக்கட்சியின் கொறடாவாகவும் இருந்தவர். அறிஞர் அண்ணாவுக்கு அவர் மீது, ஈர்ப்பு உண்டு. அறிஞர் அண்ணாவைப் பார்த்து “சீஷீuக்ஷீ பீணீஹ்s ணீக்ஷீமீ ஸீuனீதீமீக்ஷீமீபீ” என்று இவர் கூற, அதற்கு அவர் விஹ் ஷிtமீஜீs ணீக்ஷீமீ னீமீணீsuக்ஷீமீபீ என்று அவர் பதிலிறுத்தது சட்டமன்ற விவாதத்தின் உச்சகட்ட உரையாடல். “தமிழகத்தின் அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர் அவர்” என்று அவரை அண்ணா அழைத்தார். காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, இவரைப் போன்ற பல எழுச்சி மிக்க தலைவர்களை, பொது வாழ்வில் சந்தர்ப்பம் இழக்கச் செய்தது.

“பேரறிஞர்” ஆனைமுத்து எனப் பெரியாரால் பாராட்டப் பெற்றவர்.
“மண்டல் கமிஷன் அமைந்ததற்கும், அதன் பரிந்துரைப்படி மத்திய அரசில் இதர பிற்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு அமலானதற்கும், உண்மையான சொந்தக்காரர் வே.ஆனிமுத்து” என துக்ளக் இதழாசிரியர் “சோ”-ஆல் பாராட்டப் பெற்றவர் இவர். பெரம்பலூர் மாவட்டத்தில், குருக்கன்குடி என்ற ஊரில் பிறந்தவர். உழைப்பாளர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஆ.கோவிந்தசாமி படையாச்சியாரின் (பின்னாளில் திமுக அமைச்சர்) சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தான் பார்த்த அரசு வேலையை, திராவிடர் கழகப் பணிக்காகத் துறந்தவர்.

பெரியாரின் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 18 மாதம் சிறைத் தண்டனையை வேலூர் சிறையில் அனுபவித்தவர். பெரியாரின் சிந்தனைகளை நூல் வடிவில் வெளியிட அரும்பாடு பட்டவர். காலக்கொடுமையால், பெரியார் இறந்த ஓராண்டுக்குள், திராவிடர் கழகத்தை விட்டு, வெளியேற்றப்பட்டவர். தனது சமூகப் பணியை மடை மாற்றி, ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெறுவதில் ஈடுபட்டு, அதற்காகப் பெரு முயற்சி மேற்கொண்டு அதிலே மாபெரும் வெற்றி கண்டவர். 1978-இல் இந்திய ஜனாதிபதி, பிரதமர் மொரார்ஜி தேசாய், எதிர்க்கட்சித் தலைவர் இந்திராகாந்தி ஆகியோரைச் சந்தித்து, ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் இட ஒதுக்கீடு கொள்கைளை விளக்கும் விரிவான துண்டறிக்கைகளை வெளியிட்டவர்.

இவருக்கு ஜனதா கட்சியைச் சேர்ந்த இராம் அவதேஷ் சிங், எம்.பி., வாழப்பாடி இராமமூர்த்தி எம்.பி., மண்டல் எம்.பி. ஆகியோர் உதவிட முன் வந்தனர். ஆனைமுத்து குழுவினர் இராம் அவதேஷ் சிங் குழுவினருடன் இணைந்து, பீஹாரில் 1978-ஆம் ஆண்டு நடத்திய பிரச்சாரத்தாலும், சிறை நிரப்புப் போராட்டத்தாலும், பீஹார்
அரசு பிற்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தது. அதைத் தொடர்ந்து, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் 1978&-79 ஆண்டுகளில் முதன் முறையாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

1979-ஆம் ஆண்டு மாலீ;ச்சு மாதம் புது டில்லியில் பெரியார் நூற்றாண்டு விழாவையும், ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாளையும் முன்வைத்து, ஆனைமுத்து அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில், ஆனைமுத்து அவர்களின் இட ஒதுக்கீடு கருத்துக்களை இந்தியில் மொழி பெயர்த்து, மத்திய அமைச்சர் இராஜ் நாராயண் வெளியிட்டார். அந்த கூட்டத்தில் துணைப் பிரதமர் ஜெகஜீவன்ராம் அவர்கள் கலந்து கொண்டார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் 1979- இல் பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்பட்டோர் குழுவை நியமித்தார்.

31.12.1980-இல் பி.பி. மண்டல் தனது அறிக்கையை பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை. குடியரசு தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றுவோம் என்று ஆனைமுத்து அவர்கள்
அறிவித்ததும், மத்திய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங், அவரை அழைத்துப் பேசி மண்டல் குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சாதி, சமூக, அரசியல் கட்சிகள் என அனைவரும் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடினார். இறுதியாக, 13.8.1990-இல் மத்திய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்து, பிரதமர் வி.பி.சிங் ஆணை பிறப்பித்தார். அதற்கு விலையாக தனது பிரதமார் பதவியை இழந்தார். பெரியாரே தனது வாழ்க்கை என வாழ்ந்த பேரறிஞர் ஆனைமுத்து அவர்கள், பெரியாரின் அசைக்க முடியாத வித்து. ஆனால், அதற்கு அவரது மனைவியும் குழந்தைகளும் கொடுத்த விலை வறுமையும், சொல்லொணாத் துயரமும் தான். இவரைப் பற்றி விரிவாகச் சொல்வதற்குக் காரணம் இவருடைய உழைப்புக்கு இன்று வரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமய உலகில், வைணவத்திற்கு ஒரு நம்மாழ்வார் என்றால், திராவிட கழக உலகில், பெரியாருக்கு அறிஞர் ஆனைமுத்து அவர்கள். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதற்கு இவர் அடையாளம் இவர்.

“எந்த நாட்டிலுமே ஆதிக்கம் செலுத்தப் புகும் பரதேசிகள் அந்த நாட்டிலுள்ள சுதேசிகளை நம்புவதில்லை, தங்களைப் போன்ற பரதேசிகளையே நம்புவார்” என்று கூறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களது வாக்கு இவர் வாழ்க்கையில் பலித்தது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தந்தை பெரியாரின் சொத்துக்கள், இன்னொரு சிறுபான்மையினரைச் சென்றடைந்ததே தவிர, பெரும்பான்மையான வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இவருக்குக் கிஞ்சித்தும் பயன்படவில்லை. அதைப் பற்றி. இவர் கவலைப்படவும் இல்லை.

வாழப்பாடி கே. ராமமூர்த்தி அவர்கள் வன்னிய சமூகத்தின் பெருமிதம். எளிய விவசாயக் குடும்பத்தில் 18.1.1940 சேலம் மாவட்டத்தில் கூத்தப்ப படையாட்சிக்கும், பழநியம்மாள் தம்பதியினருக்கும் மகனாகப் பிறந்து 27.10.2001 வரை வாழ்ந்து பல சாதனைகள் நிகழ்த்தியவர். 1971 முதல் 1999 வரை, ஒன்பது முறை பாராளுமன்ற தேர்தல்களில் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஏழு முறை வெற்றி பெற்று, பாராளுமன்றப் பணியையும், கட்சித் தலைமையையும் மக்கள் பாராட்டும்படி செய்து காட்டியவர். இருபதுக்கும் மேற்பட்ட தனி நபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் இவர் தாக்கல் செய்திருந்த போதிலும், அவற்றுள் வைரமாக மின்னுவது, இவர் தாக்கல் செய்த தனி நபர் மசோதாவின் செயல் வடிவமாக இன்றைக்கும் திகழ்கின்ற பஞ்சாயத்து இராஜ் சட்டம் ஆகும். பொதுத் துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழுத் தலைவராகப் பணியாற்றியவர்.

1998-இல் வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறையின் தனிப் பொறுப்பு அமைச்சராக இருந்தவர். இவரது காலத்தில், சமையல் வாயு இணைப்பு கேட்டு விண்ணப்பித்த சில நாட்களில், அனைவருக்கும் இணைப்பு கிடைக்கும்படி செய்தவர். இவரது காலத்தில்தான், பெட்ரோல், டீசல் விலை முதன் முறையாகக் குறைந்தது. பெட்ரோல் பங்க் உரிமையைப் பெறுவதில், இட ஒதுக்கீட்டு விகிதாச்சார அடிப்படையில், அனைத்துச் சமூகத்தினருக்கும் வழங்கும் நடைமுறையை உருவாக்கியவர். இவரால் பல வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பெட்ரோல் பங்க் உரிமையாளரானார்கள்.

இந்திராகாந்தி அம்மையார் அவர்கள், அணிசேரா நாடுகள் தத்துவத்துக்கான இந்திய பயிற்சி மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறுப்பை இவருக்கு அளித்தார். மிழிஜிஹிசி அமைப்பின் மிகச் சிறந்த தொழிற்சங்கவாதி. மிழிஜிஹிசி அமைப்பை தேசிய வங்கிகளில் வேரூன்றச் செய்தவர் இவர். மிழிஜிஹிசி இல் உருவாக்கப்பட்ட மிழிஸிலிதி (மிஸீபீவீணீஸீ ழிணீtவீஷீஸீணீறீ ஸிuக்ஷீணீறீ றீணீதீஷீuக்ஷீ திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ) அமைப்பு இந்தியா முழுவதிலும் உள்ள கிராமத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது. இதன் அகில இந்தியத் தலைவராக இருந்தார்.

அதனை மிதிறிகிகிகீ என்கிற சர்வதேச தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்துடன் இணைத்தார். அதன் மூலம் மிலிளி -இன் ஆலோசகரானார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்தபோதுதான், காங்கிரஸ்
கட்சி 27 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இவ்வளவு விவரங்களைத் தருவதற்குக் காரணம், இவருடைய சாதனைகள் மீண்டும் மீண்டும் மக்கள் மன்றத்தில் பேசப்பட வேண்டும் என்பதுதான். இவருக்குப் பின்வந்தவர்கள் இவரைவிடவும் காபினட் அந்தஸ்து பெற்று மத்திய அரசில் புகழோடு பணியாற்றி இருக்கின்றனர். ஆனால், அவர்கள் தனது தந்தையின் தோள் மீது நின்று பதவி பெற்றவர்கள். இனத்தின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தப்பட்டாலும், இனத்தின் அடையாளமாக கருதப்பட முடியாதவர்கள்.

இவரைப் போல் சுயம்புவாக உருவாகி, இன உணர்வோடு செயல்பட்டு, “நான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவன். ஆனால், எனக்குத் தலைவர் டாக்டர் இராமதாஸ் அவர்கள்” என்று தைரியமாகச் சொன்னவர்கள் அபூர்வம். மறைந்த தலைவர்களில், இராமசாமிப் படையாச்சியாருக்குப் பிறகு, வன்னிய அரசியல் தலைவர்களில் இன்றும் நினைந்து போற்றப்பட வேண்டியவர்.

மக்கள் தொகை அடிப்படையில், தமிழ்நாட்டின் முதல் பெரும்பான்மைச் சமூகமாக மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்ததிலும், சிறைக் கொடுமைகளை அனுபவித்து, தியாகம் புரிந்ததிலும், முதல் நிலைச் சமூகமாகவும், இருந்தது வன்னியர் சமூகம். வன்னிய சமூகத்தில் திறமைக்குப் பஞ்சமில்லை. தைரியத்திற்கும் பஞ்சமில்லை. உழைப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும், இந்தச் சமூகத்தின் பஞ்சம் இன்னும் தீர்ந்தபாடில்லை. அண்மையில் பொது மேடையில் சொல்லப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்கின்ற பகுதிகளில்தான் அதிகமான குடிசைகள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் அந்த அளவுக்குக் குடிசைகள் கிடையாது. அவை எல்லாம் பெரும்பாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தான் உள்ளன.

அப்படி என்றால், வன்னியர்கள் அடர்ந்து வாழ்கின்ற பகுதிகள் இன்னும் சொந்தமாக ஒரு கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ளக்கூட இல்லாத அளவிற்கு வறுமையில் உள்ளது என்று தெரிகிறது. வறண்ட மாநிலமான இராஜஸ்தானில் இருந்து வந்த சேட்டுகள் வளமையாக உள்ளனர். வறட்சிப் பிரதேசமான மதுரை, திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்த மக்கள் சென்னையில் வளமையாக உள்ளனர். இதற்கு என்ன காரணம் ?
நாம் விவசாயம் செய்கிறோம். அவர்கள் வியாபாரம் செய்கின்றனர் என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பஞ்சாப் விவசாயிகள் நம்மைப் போல் பஞ்சத்தில் இல்லையே? நம்மிடம் அரசியல் அதிகாரம் இல்லை. அரண்மனைக் கோழி முட்டை, குடியானவன் அம்மியை உடைக்கும் என்ற சொல்லாடல் அதிகாரத்தின் வலிமையைக் கூறுகிறது. பிழைக்க வந்தவர்களுக்கு இருக்கின்ற உந்துதல், பாதுகாப்பின்மையால் தோன்றும் அச்சம், அதனால், எந்த வேலை கிடைத்தாலும் செய்ய முன்வருகின்ற நிர்ப்பந்தம் நம்மிடம் இல்லை. இது
எனது ஊர். இங்கு எனக்கு வேண்டியது கிடைக்கிறது. கெத்தாக இங்கு வாழ்ந்தால் போதும் என்ற மௌடிகத்தனம் வன்னியர்களிடம் குடி கொண்டுவிட்டது. இழந்து விட்ட வாய்ப்புகளையும், அன்றாடம் இழந்து கொண்டிருக்கின்ற வாய்ப்புகளையும் பற்றிய உணர்வே இல்லாமல் போய்விட்டது. ஜனநாயத்தில் எண்ணிக்கைதான் அரசியலை முடிவு செய்கிறது என்ற ஞானம் இல்லாமல் போய்விட்டது.

இது எனது மண். எனது பிரதிநிதி என்னவனாக இருக்க வேண்டும் என்ற பார்வை இல்லாமல் போய்விட்டது. நாம் விரும்பும் வகையில் நம்மை ஏமாற்றுகின்ற சினிமா கவர்ச்சியாலும், அதற்குச் சற்றும் குறையாத, மேடையிலே எதுகை மோனையோடு பேசப்படுகின்ற மயக்கு மொழியாலும், சிறுபான்மையினர் செய்கின்ற பிரித்தாளும் சூழ்ச்சியுமே, நமது வீழ்ச்சிக்குக் காரணம். இந்தியர்கள் முன்னேறாததற்கு நம்மை அடிமைப்படுத்திய மொகலாயர்களும், கிறித்துவ வெள்ளைக்காரர்களும்தான் காரணம் என்பதை உணராமல், நம்மை அண்டிப் பிழைக்கின்ற பார்ப்பனர்கள்தான் காரணம் என்ற பிரச்சாரத்தின் தந்திரத்தை உணராதது மற்றுமொரு முக்கிய காரணம். பிராமணர் எதிர்ப்பு என்பது, தமிழரல்லாத பிற இனத்தவர் எழுச்சிக்கு உதவியது என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

“திராவிடர் என்பது தென்னிந்தியர் – அவர்களிலும் பிராமணரலலாதார் அனைவருக்குமான பொதுப் பெயர் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்ட பிறமொழியினருக்கும் சுத்தத் தமிழருக்குமான பொதுப் பெயராகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனாற்றான், தமிழரல்லாதார் தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் தலைமை பெற முடிந்தது” (தமிழகத்தில் பிற மொழியினார் (புத்தகம்) ம.பொ.சிவஞானம்”).

நமக்கு மற்ற சமூகங்கள் உதவாது என்பதை 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பில் நாம் தற்போது புரிந்து கொண்டோம். ஆனால், இதை தொலைநோக்கோடு, 114 ஆண்டுகளுக்கு முன்பே, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த வை. அப்பாசாமி நாயகர் என்ற வன்னியர் அப்பொழுது வெளியான “அக்கினி குல ஆதித்தன்” என்ற இதழில் ஜாதிப் பற்று குறித்து எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ஜனத்தொகையில் மிகுதியாய்யுள்ள ஒரு ஜாதியார் முன்னுக்கு வரின் தேசத்திலோர் பாகம் முன்னுக்கு வந்தது போலல்லவா? எத்தனை பொது ஸ்தாபனங்கள் ஏற்பட்டாலும் அல்லது இந்தியாவுக்கே சுய ஆட்சி கிடைத்துவிட்டாலும், அக்காலத்தில் கூட, வன்னியரை முன்னுக்குக் கொண்டுவர அன்னியர் நினையார்.”

இந்நிலை நீங்கிட என்ன வழி? அம்பேத்கார் ஒருமுறை கூறினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு மகாத்மாக்கள் தேவையில்லை. அவர்களுக்கு உரிமையளிக்கின்ற சட்டங்கள்தான் தேவை என்று. தலைவர்கள் தேவைதான். ஆனால், ஒரு தனி மனிதனை நம்பியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை வன்னிய சமூகம் உணர வேண்டிய தருணம் இது. இதுவரை சமூகத்தால் தலைவர்கள் நன்மையடைந்திருக்கிறார்கள். தலைவர்களால் சமூகம் நன்மையடைய என்ன வழி? தமிழ்த் தேசியம் பேசியது போதும். வடதமிழ்நாடு மற்றம் வன்னியத் தேசியம் என்று பேச ஆரம்பித்தால் என்ன?