தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் வெகு விரைவில் தமிழகத்திற்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்வில் தற்பொழுது லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்கள் டாக்டர் விஷ்ணுபிரசாத் முதலிடத்திலும், டாக்டர் செல்வகுமார் இரண்டாவது இடத்திலும் கரூர் நாடாளுமன்ற தொகுதி தற்போதைய உறுப்பினர் ஜோதிமணி மூன்றாம் இடத்திலும் இருப்பர்கள் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகாஅர்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சில மாநிலங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றார். அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குண்டுராவ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். இதற்கு ஏற்றார்போல் தினேஷ்குண்டுராவ் மற்றும் வேணுகோபால் இருவரும் கலந்து ஆலோசித்து புதிய தலைவரை தேர்வு செய்து ராகுல்காந்திக்கு பரிந்துரை செய்வார்கள். பின்னர் சோனியாகாந்தி பிரியங்காகாந்தியின் ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் அறிவிப்பு வெளியாகும்.
– டெல்லிகுருஜி

More Stories
மத்திய அரசிடம் நிதியை பெறுவதற்கு திட்டங்கள் மூலமே நிதியை பெறமுடியும்
கடிதம் எழுதினால் நிதி கிடைக்காது
திமுகவுக்கு பதிலடி
நடிகர் விஜய்யும் ஊழல்வாதி தான்
பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு Work From Home.. போக்குவரத்து பிரச்சனையால் புது திட்டம்
தவெகவுக்கு தாவும் ’தங்க’’இனிஷியல்’ மாஜி?
கேட்டை திறந்த விஜய்..