இலங்கை அதிபர் தேர்தல் ஆகஸ்ட் 5&ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிழ்ந்த ராஜபக்சே இருவரின் அதிகார வரம்பிற்குள் இலங்கை தேர்தல் முடிவு வருமேயானால் இலங்கை தமிழர்களின் நிலை அந்தோ பரிதாபம் என்ற அளவிலே அமைந்துவிடும். இலங்கை தமிழர்கள் அதிகாரத்திற்கும் உரிமைக்காகவும் போராடி கொண்டிந்த காலங்கள் விழலுக்கு இரைத்த நீராக போய்விடும். எதிர்காலம் என்பது உணவுக்கும் உயிருக்கும் பாதுகாப்பற்று போய்விடும் சூழல் உருவெடுக்கலாம். இலங்கை தமிழர்களின் கூட்டணி அரசியல் இயக்கங்கள் தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை பயன்படுத்தி அதிபர் தேர்தலில் வெற்றிகளை குவித்தால் ஒழிய தமிழர்களின் நிலை இலங்கை தேர்தலில் படும் மோசமான விளைவுகளை போற்றிவிக்கும் அபாயம் இருக்கிறது.
குறிப்பாக வடகிழக்கு மாகாண இணைப்பு என்பதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி (ராஜீவ்காந்தி, ஜெயவர்தன்) வடகிழக்கு மாநில இணைப்பு என்பதும் 13வது சரத்தும், 19 சரத்தும் நிறைவேற்றுவதற்கான வழி அறவே அற்றுப்போய்விடும் வழிகள் முற்றிலும் அடைப்பட்டு போய்விடும். இதனால் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் கடின உழைப்பும் அவர்களுடைய ஒத்துழைப்பும் அவர்கள் சிந்துகின்ற வேர்வையும், பயனற்று போய்விடும். தமிழர்கள் பெரும்பான்மையை வசித்து வந்த வன்னிப்பகுதியில் சிங்களவர்களின் குடியேற்றம் தொடர்ந்து நடைபெறுவதால் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படும். அதே நேரம் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்கள் சிறுபான்மையினராக மாறவேண்டிய கட்டாயம் உருவெடுக்கும்.இப்படி சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் முரண்பட்ட நிலை உருவாகி தமிழர் பகுதி முழுவதும் சிங்களவர் பகுதியாக மாற்றப்பட்டு தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்படும். தமிழ் ஈழ என்ற பேச்சு எதிர்காலத்தில் எழாதப்படி அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிழ்ந்த ராஜபக்சே கூட்டணியும் அரசின் செயல்பாடுகளும் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் எதிராக செயல்பட்டு தமிழர்கள் மீண்டும் இலங்கையை விட்டு பிழைப்பு தேடி தங்கள் விரும்புகின்ற நாடுகளுக்கோ அல்லது தமிழ்நாட்டிற்கோ செல்ல வேண்டிய ஒரு கட்டாய நிலை உருவாகும்.
இந்திய அரசாங்கம் எந்த வகையிலும் தமிழர்களுக்கு உதவி செய்வதை விட இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதிலேயோ முனைப்புக் காட்டும். காரணம் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்காமல் இருப்பதற்கு இலங்கை அதிபருக்கும், இலங்கை அரசுக்கும் தேவையான உதவிகளை இந்திய அரசாங்கம் செய்து கொடுத்து தமிழர்களுக்கு உதவி செய்வதாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையே உருவாகும்.
தமிழ்தேசிய அமைப்புகள் வழிநடத்தும். சம்பந்தம் அவர்களும் பாலச்சந்திரன் அவர்களும் முதல்வராக
இருந்த விக்னேஷ்வர் அவர்களும் தனிமைப்படுத்துவார்கள். இவர்களுக்குள் ஒற்றுமை உணர்வுகள் வெளிப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இயலாமல் போய்விடும். இலங்கை அரசியல் அமைப்பு சட்டம் தமிழர்களுக்கு எதிராகவே இருப்பதினால் சர்வதேச சமூகமும் தமிழர்கள் விஷயத்தில் சற்று விலகி நிற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே வரும் தேர்தல் முடிவு என்பது தமிழர்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மையை எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழர்களுக்கான ஆதரவு நிலை தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி