பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி உள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’, இப்படக்குழுவினருக்கு நடிகர் நாசர் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த படத்தின் கதை 1970-களில் வடசென்னை பகுதியில் நடத்தப்பட்ட பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை ஆங்காங்கே இணைத்திருந்தனர். இதனால் இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் நாசர் பா.ரஞ்சித்தை பாராட்டி கடிதம் எழுதி உள்ளார். அதில், “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உங்கையைப் புடிச்சி ஒரு நூறு முத்தங் கொடுத்து, ‘நன்றி’ன்னு ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எஞ் சமூகத்துக்கு கொடுத்ததுக்கு..” என்று குறிப்பிட்டுள்ளார்.
More Stories
வெளியாகும் கூலி பட அப்டேட்
உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்