சென்னை: இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக அவர் வருகிற 4-ந்தேதி டெல்லி செல்லலாம் என்றும், 5-ந்தேதி கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

More Stories
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசனை