தமிழக சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரை நிறைவடைந்ததும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

More Stories
இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது