சென்னை: அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: * அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. * தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். * தமிழக மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. * த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

More Stories
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசனை